அரசு பஸ் டிப்போவில் டிரைவர் தூக்கு போட்டு சாவு: போலீஸ் விசாரணை
புளியங்குடி: புளியங்குடி அரசு போக்குவரத்து பனிமணையில் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை மாவட்டம் புளியங்குடி முப்புடாதியம்மன் கோவில் 1வது தெருவைச் சேர்ந்த சின்ன கருப்பையா மகன் திருமலைசாமி. இவர் புளியங்குடி டிப்போவில் அரசு போக்குவரத்து கழக பனிமணையில் டிரைவராக வேலை செய்தார்.
தடம் எண் 12 சிட்டி எக்ஸ்பிரஸ் என்ற பஸ்சில் வாசுதேவநல்லூரில் இருந்து தென்காசிக்கு செல்லும் ரூட்டில் பணியாற்றி வந்தார். நேற்று மதியம் பணி முடிந்து திரும்பினார். தினமும் காலையில் அரசு பனிமணையில் குளிப்பதற்காக வந்து செல்வது வழக்கம்.
அதே போல் இன்று காலை 7.30 மணி அளவில் பணிமனைக்கு வந்தார். தொடர்ந்து டிரைவர், நடத்துநர் தங்கக் கூடிய பெரிய அறையில் சில நிமிடங்கள் அமர்ந்திருந்த அவர் யாரும் இல்லாத நேரத்தில் அங்குள்ள கம்பியில் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அப்போது தற்செயலாக அந்த அறைக்கு வந்த ஊழியர் யாரோ தூக்கில் தொங்குவதை கண்டு திடுக்கிட்டு கிளை மேலாளர் சுப்பிரமணியத்திடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு வந்த மேலாளர் சுப்பிரமணியன் மற்றும் பணிமனை ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டது திருமலைசாமி தான் என்பதை தெரிந்து கொண்டனர்.
இது குறித்து புளி்யங்குடி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணியன், சின்னமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
தற்கொலை செய்த திருமலைசாமிக்கு இசக்கியம்மாள் என்ற மனைவியும், சித்ரா, கலைவாணி என்ற மகள்களும், ராஜா என்ற மகனும் உள்ளனர். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு குடும்ப பிரச்சனை காரணமா அல்லது பணியில் எதுவும் கெடுபிடி உண்டா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications