லிபிய கவலரம்: ஆசிய பங்குச் சந்தைகள், விமான நிறுவனங்கள் வீழ்ச்சி
பாங்காக்: லிபிய நாட்டில் வெடித்துள்ள மக்கள் போராட்டம், நியூஸிலாந்து நிலநடுக்கம் போன்றவற்றால் காரணமாக ஆசிய பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.
ஜப்பானின் பங்குச் சந்தை நிக்கி 225 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது. ஹாங்காங் பங்குச் சந்தையில் 1.9 சதவீதம், அதாவது 400 புள்ளிகள் வரை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
தென் கொரியாவின் பங்குச் சந்தையான கோப்ஸியிலும் 1.8 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா, தைவான், சிங்கப்பூர் மற்றும் சீனா போன்ற நாடுகளிலும் பங்குச் சந்தையில் வீழ்ச்சிப் போக்கு காணப்படுகிறது.
இந்தியப் பங்குச் சந்தையில் இன்று காலை முதலே புள்ளிகள் சரிந்து காணப்பட்டன. சென்செக்ஸ் 155 புள்ளிகளை இழந்தது.
எண்ணெய் ஏற்றுமதி நாடுகளான குவைத், சவுதி அரேபியா போன்றவற்றின் பங்குச் சந்தைகள் பெருமளவு சரிவுக்குள்ளாகின.
விமானப் போக்குவரத்து பாதிப்பு:
விமானப் போக்குவரத்து நிறுவனங்களும் லிபிய வன்முறையால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. கொரியன் ஏர்லைன்ஸ், ஏசியானா ஏர்லைன்ஸ் நிறுவனங்களில் பயணிகள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது. ஒருநாளின் பயணிகள் போக்குவரத்தில் 10 சதவீதம் வரை இந்த நிறுவனங்கள் வீழ்ச்சி கண்டுள்ளன.
கதே பசிபிக் 5 சதவீத வீழ்ச்சிக்குள்ளாகியுள்ளது. சீனாவின் ஈஸ்டர்ன் மற்றும் வெஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.


Click it and Unblock the Notifications
