பார்வதி அம்மாள் மறைவு-பெங்களூர் தமிழ்ச் சங்கம், பொதுவுடமைக் கட்சி அஞ்சலி
சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் மறைவுக்கு பல்வேறு தமிழ் அமைப்புகள் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளன.
பெங்களூர் தமிழ்ச் சங்கம் பார்வதி அம்மாளுக்கு புகழாரம் சூட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,
உலகத்தமிழர் பார்வையில் மாவீரனாக விளங்கிய பிரபாகரனை ஈன்றெடுத்த அவருடைய தாயார் பார்வதி அம்மாள், நேற்று முன்தினம் மறைந்த செய்தி உலகத் தமிழர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
உலகிற்கு மனிதன் ஒருவனை அளித்த அன்னை பார்வதி அம்மாள் மறைவு ஈடுசெய்ய இயலாத இழப்பாகும். தனது இறுதி காலத்தில் தமிழகத்தில் மருத்துவ சிகிச்சையை பெற அவர் எடுத்த முயற்சி வெற்றி பெற்றிருந்தால் இன்னும் சில ஆண்டுகள் நம்மோடு வாழ்ந்திருப்பார் என்று கருதத் தோன்றுகிறது.
பார்வதி அம்மையாரின் மறைவு தமிழர்களின் நெஞ்சில் நீங்கா வடுவினை ஏற்படுத்தினாலும், தமிழர்கள் வரலாற்றில் ஒரு நிலையான இடத்தை அவரது வரலாறும் இடம்பெறும். பார்வதி அம்மையாரின் மறைவிற்கு பெங்களூர் தமிழ்ச் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேச பொதுவுடமைக் கட்சி இரங்கல்
தமிழ் தேச பொதுவுடமைக் கட்சி சார்பில், 20ம் தேதியன்று சிதம்பரம் காந்திசிலை அருகில் பார்வதி அம்மாள் அவர்களின் மறைவையொட்டி வீரவணக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.
கூட்டத்திற்கு அமைப்பின் நகரச் செயலர் கு.சிவபிரகாசம் தலைமை தாங்கினார். இதேபோல மதுரையில், வீர வணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது. ஜான்சிராணி பூங்காவில் தொடங்கிய அமைதிப் பேரணி கறுப்புக் கொடியுடன் முழக்கங்கள் எதுவும் இன்றி,நேதாஜி சாலை,மேலமாசி வீதி வழியாக வடக்குமாசி வீதி-மேலமாசி வீதி சந்திப்பை அடைந்து, பின்னர் வீரவணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியின் போது பேசிய அனைவரும், தமிழகத்தில் பார்வதி அம்மாள் சிகிச்சை பெற அனுமதிக்கப்படாததை கடுமையாக கண்டித்துப் பேசினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications