லாக்கரை திறக்கமுடியாததால் எல்ஐசி பணப்பெட்டிக்கு தீ வைப்பு : காசோலைகள் கருகின
புளியங்குடி: கொள்ளையடிக்கப்பட்ட புளியங்குடி எல்ஐசி பணப்பெட்டி கருகிய நிலையில் குப்பை தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புளியங்குடியில் உள்ள எல்ஐசி அலுவலகத்தில் கடந்த 12-ம் தேதி ரூ.5.76 லட்சம் மற்றும் ரூ.1.85 லட்சம் காசோலைகள் அடங்கிய இரும்பு பணப்பெட்டி கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து எஸ்பி விஜேயந்திர பிதாரி, புளியங்குடி டிஎஸ்பி ஜமீம் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் டிஎன் புதுக்குடி பகுதியில் உள்ள நகராட்சி குப்பை தொட்டியில் கொள்ளையடிக்கப்பட்ட பணப்பெட்டி கிடப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து புளியங்குடி போலீசார் அங்கு சென்று பணப்பெட்டியை கைப்பற்றினர். தீ வைத்து எரிக்கப்பட்டு சேதமடைந்த நிலையில் அது காணப்பட்டது. உடைக்க முடியாததால் கொள்ளையர்கள் பணப்பெட்டியை குப்பை மேட்டில் வீசி சென்றது தெரிய வந்தது. இது குறித்து எல்ஐசி மேலாளர் சுந்தர்ராஜனுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர் இன்று அதிகாலை புளியங்குடி வந்தார். பின்னர் டிஎஸ்பி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பணப்பெட்டியை போலீசார் சுந்தர்ராஜனிடம் இருந்து சாவியை வாங்கி திறந்து பார்த்தனர்.
அப்போது பெட்டிக்கு தீவைக்கப்பட்டதால் அதிலிருந்த பணம் மற்றும் காசோலைகள் எரிந்து சாம்பலாகி இருப்பது தெரிய வந்தது. பணப்பெட்டியை கொள்ளையடித்து தீ வைத்தவர்கள் உள்ளுர்காரர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications