ஒரிஸ்ஸா-நக்ஸல்களால் கடத்தப்பட்ட கலெக்டர், பொறியாளர் விடுதலை
புவனேஸ்வர்: ஒரிஸ்ஸாவில் நக்ஸலைட்டுகளால் கடத்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர், அரசுப் பொறியாளர் ஆகியோர் நேற்று விடுவிக்கப்பட்டனர்.
ஒரிஸ்ஸாமாநிலம் மல்காங்கிரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி.கிருஷ்ணா, அரசுப் பொறியாளர் பவித்ர மஜி ஆகியோர் கடந்த வாரம் நக்ஸல்களால் கடத்திச் செல்லப்பட்டனர். அவர்களை விடுவிக்க வேண்டுமானால் சிறையிலிருக்கும் நக்ஸல் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 கோரிக்கைகளை நக்ஸல்கள் முன்வைத்தனர்.
இதையடுத்து நக்ஸல்கள் சார்பில் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் ஆர்.எஸ்.ராவ், ஹர்கோபால், தண்டபாணி மொஹந்தி ஆகியோர் அரசுடன் பேச்சு நடத்தினர். சிறையில் இருக்கும் நக்ஸல் தலைவர் காந்தி பிரசாதும் இந்தக் குழுவில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
நக்ஸல்கள் விடுவிக்கக் கோரிய அவர்களது முக்கியத் தலைவர் ஸ்ரீனிவாசலு உள்ளிட்ட 12 பேரும் செவ்வாய்க்கிழமை மல்காங்கிரி விரைவு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். அதற்கு அரசு தரப்பில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை. இதனால், அவர்கள் அனைவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.
பேச்சுக்களில் பங்கேற்ற காந்தி பிரசாத் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதும் நக்ஸல்களின் கோரிக்கை. அதன்படி, அவர் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருக்கிறார். இதற்கு அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலாவரம் அணைக்கட்டுத் திட்டத்தை நிறுத்த வேண்டும், மல்காங்கிரி, கோராபுத் பகுதிகளில் அபகரிக்கப்பட்ட நிலங்களுக்கு பழங்குடி மக்களிடம் பட்டாக்கள் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டு விட்டதாகவும் மாநில உள்துறை செயலாளர் பெஹரா கூறினார்.
மேலும் கோராபுத் சிறையில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படும் இருவரது குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் அரசால் ஏற்கப்பட்டன.
மேலும் மாலி, தேவ்மாலி மலைப் பகுதிகளில் பாக்சைட் தோண்டியெடுப்பதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
மாவோயிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர்கள் சிலா டி, பத்மா ஆகியோரை விடுவிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அரசு உத்தரவாதம் தந்தது.
இதையடுத்து கடத்திச் செல்லப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் கிருஷ்ணா, இளநிலைப் பொறியாளர் பவித்ர மஜி ஆகியோரை மாவோயிஸ்டுகள் விடுவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications