கடலூரில் படகு விபத்து-25 மாணவ, மாணவியர் பத்திரமாக மீட்பு
கடலூர்: கடலூரில் அதிக பாரத்துடன் சென்ற படகு மூழ்கியதில் அதில் பயணம் செய்த 25 மாணவ, மாணவியர் உப்பனாற்றில் மூழ்கினர். அவர்களைப் பொதுமக்களும், போலீஸாரும் போராடி பத்திரமாக மீட்டுள்ளனர்.
10 கிராமங்களுக்கு பஸ்கள் வராதால் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் நொச்சிக்காடு உள்ளிட்ட 10 கிராமஙங்களுக்கு கடந்த ஒரு வாரமாக பஸ்கள் ஓடவில்லை. கடந்த வாரம் சிலர் கல்வீச்சில் ஈடுபட்டு பஸ்களைத் தாக்கியதால் பஸ் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது போக்குவரத்துக் கழகம்.
இதனால் மாணவ, மாணவியர் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர். கிடைக்கிற வாகனத்தில் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று காலை, நொச்சிக்காட்டிலிருந்து செம்மங்குப்பத்திற்கு ஒரு படகில் 25 மாணவ, மாணவியர் ஏறி பயணம் செய்தனர்.
அதிக பாரத்துடன் படகு சென்றதால் பாரம் தாங்காமல் படகு ஆற்றில் கவிழ்ந்தது. இதில் தண்ணீரில் சிக்கிய மாணவ, மாணவிகள் கதறினர். இதையடுத்து விரைந்து வந்த பொதுமக்களும், போலீஸாரும் கடுமையாகப் போராடி அத்தனை பேரையும் பத்திரமாக மீட்டு விட்டனர்.
உடனடியாக பஸ் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications