திமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சி போட்டியிடும்: தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
கடலூரில் புதிய நீதிக் கட்சியின் கடலூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. அதில் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சி போட்டியிடும். பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம் என்றார்.
புதிய நீதிக்கட்சியின் மாநில மாநாடு வரும் 27-ம் தேதி வேலூரில் நடைபெறும் என்று அறிவித்திருந்தோம். ஆனால் ஏற்பாடுகள் செய்வதற்கு கால அவகாசம் இல்லாததால் மாநாட்டை மார்ச் மாதம் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளோம் என்று ஏ.சி.சண்முகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications