போலி செக் மூலம் ரூ.9.5 கோடி மோசடி முயற்சி: ரியல் எஸ்டேட் அதிபரிடம் விசாரணை
கோவில்பட்டி: கோவில்பட்டி வங்கியில் ரூ.9.5 கோடி போலி செக் கொடுத்து மாற்ற முயன்ற ரியல் எஸ்டேட் அதிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி ஜோதி நகரைச் சேர்ந்த பாண்டியன் மகன் கதிரவன். ரியல் எஸ்டேட் அதிபர். கோவில்பட்டி அருகே ராமனூத்து கிராமத்தில் 50 ஏக்கர் நிலத்தை விற்பதற்காக மும்பையைச் சேர்ந்த தேவ்கிநந்தன் ஜெகுப்தா என்பவரின் பவர் ஏஜென்டாக செயல்படும் சேகர் என்பவர் கடந்த 19-ம் தேதி கதிரவனிடம் ரூ.9.5 கோடிக்கு யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் மாற்றத்தக்க வகையில் செக்கை கொடுத்தார்.
அதை மாற்றுவதற்காக கோவில்பட்டி புதுரோட்டில் உள்ள யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு கதிரவன் சென்றார். அவர் கொடுத்த செக் மீது வங்கி மேலாளர் சேசமாரி குமாரனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து அவர் மும்பையில் உள்ள தேவ்கிநந்தன் ஜெகுப்தாவிடம் தொடர்பு கொண்டபோது தான் செக் கொடுக்க வில்லை என தெரிவித்தார். இதையடுத்து போலி செக் கொடுத்த கதிரவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சேசமாரி குமாரன் கோவில்பட்டி கிழககு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலாஜி, குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம், ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications