ரயில்வே துறையின் வருமானத்தில் ஊழியர்களின் சம்பளத்திற்கு 42% செலவு

இந்தியாவின் தனிப் பெரும் அரசுத் துறையாக விளங்குவது ரயில்வே துறை. இதன் ஆண்டு வருவாயில் 42 சதவீதத்தை அதன் ஊழியர்களுக்கான சம்பளத்திற்கு ரயில்வே துறை செலவழிக்கிறது. சம்பளம், போனஸ், படிகள் என இந்தத் தொகை செலவிடப்படுகிறது.
ரயில்வேக்கு கிடைக்கும் வருவாயில் மூன்றில் இரண்டு பங்கு, சரக்குப் போக்குவரத்தின் மூலமாகத்தான் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
2009-10ம் ஆண்டில் ரயில்வே துறை ஒரு ரூபாயில், 42 பைசாவை ஊதியத்திற்காகவும், படிகளுக்காகவும் செலவிட்டுள்ளது. 17 பைசாவை ஓய்வூதியத்திற்காக செலவிட்டுள்ளது.
ரயில்வே துறையின் 3 வது மிகப் பெரிய செலவீனமாக எரிபொருள் உள்ளது. அதற்கு மட்டும் 16 சதவீத நிதியை அது செலவிட்டுள்ளது.
ரயில்வேக்கு கிடைக்கும் வருவாயில் ஒவ்வொரு ரூபாயிலும், 65 பைசா அளவு அதாவது 65 சதவீத அளவிலான வருவாய், சரக்கு போக்குவரத்தின் மூலம்தான் கிடைக்கிறது. பயணிகள் கட்டணம் மூலம் கிடைக்கும் வருவாயின் அளவு 26 சதவீதமாகும்.
2011-12க்கான ரயில்வே பட்ஜெட்டில், ரயில்வேயின் சரக்குப் போக்குவரத்து வருவாயின் அளவு ரூ. 68,620 கோடியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது இது 62 ஆயிரத்து 489 கோடியாக உள்ளது.












Click it and Unblock the Notifications