அமெரிக்காவி்ல் திருடனைப் பிடிக்க உதவிய பேஸ்புக்

Subscribe to Oneindia Tamil

ஹூஸ்டன்: பேஸ்புக் மூலம் திருடன் ஒருவனை அமெரிக்க போலீசார் பிடித்துள்ளனர்.

பேஸ்புக் மூலம் நண்பர்கள் வட்டாரத்தை விரிவாக்கலாம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதன் மூலம் போலீசார் திருடனையும் கண்டுபிடித்துள்ளனர் என்பது தான் தற்போதைய செய்தி.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் டேனியல் பாய்ஸ் (25). அவர் ஸ்வான்சீ மாலில் உள்ள ரீகல் சினிமாஸ் என்ற தியேட்டரிலிருந்து பணத்தை திருடியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் அங்குள்ள கல்லாப் பெட்டியில் இருந்து பணத்தை திருடிச் செல்கையில் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் அவரது உருவம் பதிவாகியுள்ளது.

உடனே போலீசார் பேஸ்புக்கில் அவருக்கு அக்கௌண்ட் இருக்கிறதா என்று தேடியுள்ளனர். அதில் பாய்ஸுக்கு பேஸ்புக்கில் கணக்கு இருந்தது தெரிய வந்தது. அவரைக் கண்டுபிடிப்பதில் தியேட்டர் கிளார்க்கும் நிறைய தகவல்களைக் கொடுத்து உதவினார்.

பேஸ்புக் மூலம் பாய்ஸ் குறித்த தகவல்களை திரட்டிய போலீசார் நேற்று மசாசுசெட்ஸில் உள்ள ஒரு மால் அருகே வைத்து பாய்ஸை கைது செய்தனர். அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+