நாளை மத்திய பட்ஜெட்-வரிச் சலுகைகள் இடம் பெறும் எனத் தகவல்

Subscribe to Oneindia Tamil

Pranab Mukherjee‎
டெல்லி: நாளை மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்கிறார். அப்போது தனி நபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் என்று தெரிகிறது.

அதேபோல விவசாயிகளுக்கும் நிறைய சலுகைகள் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது ரூ. 1.60 லட்சமாக உள்ள தனி நபர் வருமான வரி உச்சவரம்பு ரூ. 2 லட்சமாக உயர்த்தப்படும் என்று தெரிகிறது. அதேபோல தனி நபர் வருமான வரிச் சலுகை சேமிப்பை ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 1.50 லட்சமாக உயர்த்தி அறிவிப்பார் பிரணாப் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில், குறிப்பாக பிரணாப் சார்ந்த மேற்கு வங்கத்திற்கு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் கணிசமான சலுகைகள் இடம் பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடும் விலைவாசி உயர்வால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளதாலும், இந்த பட்ஜெட்டில் மக்களை குளிர்விக்கும் சலுகைகள் அதிகம் இடம்பெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கம் போல விவசாயிகளுக்கும் இந்த பட்ஜெட்டில் சில நற்செய்திகள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில் முதலீடுகள், வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பல்வேறு சலுகைகளை தொழில்துறைக்கு பிரணாப் அறிவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+