பார்வதி அம்மாள் சிதையை களங்கப்படுத்தியதைக் கண்டித்து வைகோ, நெடுமாறன் நாளை பேரணி
சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பார்வதி அம்மாளின் சிதையை அவமரியாதை செய்த சிங்கள ராணுவத்தின் செயலைக் கண்டித்தும், சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை அகற்றக் கோரியும், நாளை சென்னையில் கண்டனப் பேரணி நடைபெறுகிறது.
இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இதுதொடர்பாக மதிமுக தலைமைக் கழக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அன்னை பார்வதி அம்மையார் சிதையில் அராஜகம் செய்த சிங்கள ராணுவத்தைக் கண்டித்தும், சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை அகற்றக்கோரியும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நாளை (28-ந்தேதி) திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் சென்னை, மயிலாப்பூர், நாகேஸ்வரர் ராவ் பூங்காவில் இருந்து அறப்போராட்டப் பேரணி பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெறுகிறது.
இந்த அறப்போராட்டப் பேரணியில் மறுமலர்ச்சி தி.மு.க.கழகப் பொதுச் செயலாளர் வைகோ மற்றும் தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications