மனித உரிமை ஆணையத் தலைவர் பதவியை கேஜிபி ராஜினாமா செய்ய வர்மா வலியுறுத்தல்
டெல்லி: முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனின் உறவினர்களிடம் கருப்பு பணம் இருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. எனவே, இதற்கு பொறுப்பேற்று அவர் மனித உரிமை ஆணையத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், இல்லையெனில் குடியரசுத் தலைவர் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே. எஸ். வர்மா தெரிவித்துள்ளார்.
இது குறித்து வர்மா கூறியதாவது,
பாலகிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவரது உறவினர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய் என்றால் அவற்றை நிரூபிப்பது பாலகிருஷ்ணனுடைய பொறுப்பு. மௌனம் காப்பது பதிலாகாது.
அவர் பதவி விலகாவிடில் குடியரசுத் தலைவர் இந்த விஷயத்தில் தலையிட்டு அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். அவர் தன் மீது எந்த குற்றமும் இல்லை என்று நிரூபிக்காவிட்டால், அவரை பதவியில் இருந்து நீக்கும் பணியை துவங்க வேண்டும்.
அவர் தொடர்ந்து மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருந்தால் அவரது வார்த்தையில் நம்பிக்கையின்றி போய்விடும். ஊழல் தான் மிகப் பெரிய அதிர்ச்சியூட்டும் மனித உரிமை மீறலாகும்.
அத்தகைய ஊழல் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவரே மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருப்பது நீதிக்கு புறம்பானது ஆகும் என்றார்.
இந்த விஷயத்தில் பாலகிருஷ்ணன் பற்றி என்னால் எதுவும் கூற இயலாது. ஆனால் அவரது 2 மருமகன்களும், சகோதரரும் கருப்பு பணம் வைத்திருப்பதை கண்டுபிடித்துள்ளோம்.
நீதிபதி பாலகிருஷ்ணனின் 2 மருமகன்கள் வழக்கறிஞர் பிவி ஸ்ரீநிஜன், வழக்கறிஞர் பென்னி மற்றும் அவரது சகோதரர் அரசு வழக்குரைஞர் பாஸ்கரன் ஆகியோர் கருப்பு பணம் வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று வருமான வரித்துறை விசாரணைப் பிரிவு டைரக்டர் ஜெனரல் ஈ.டி லூகோஸ் தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications