செக்ஸ் சாமியார் பிரேமானந்தா உடல் அடக்கம் செய்யப்பட்டது

விராலிமலை, பாத்திமா நகரில் ஆசிரமம் தொடங்கி நடத்தி வந்தவர் இலங்கையைச் சேர்ந்த பிரேம்குமார் என்கிற பிரேமானந்தா. இவர் அங்குள்ள தனது சிஷ்யைகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாகவும், கொலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு சிக்கினார்.
பிரேமானந்தா மீதான வழக்கில் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார் பிரேமானந்தா. அங்கு அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும், பின்னர் குளோபல் மருத்துவமனை என்ற தனியார் மருத்துவமனையிலும் சேர்த்து சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 21ம் தேதி பிரேமானந்தா உயிரிழந்தார்.
இதையடுத்து பிரேதப் பரிசோதனை நடத்தி அவரதை உடலை பிரேமானந்தாவின் தம்பி ஸ்ரீகுமாரிடம் ஒப்படைத்தனர். அவரும், பிரேமானந்தாவின் சிஷ்யர்களும் உடலைப் பெற்று ஆம்புலன்ஸ் மூலம் பாத்திமா நகர் ஆசிரமத்திற்குக் கொண்டு சென்று பொதுமக்கள் பார்வைக்கு உடலை வைத்தனர்.
அதன் பின்னர் இன்று காலை 6 மணிக்கு பிரேமானந்தா இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் தொடங்கின. அவரது உடலுக்கு நூற்றுக்கணக்கானோர் இறுதி மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் அதன் பின்னர் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவரை இருக்கையில் அமர வைத்த நிலையில் அடக்கம் செய்து புதைத்தனர். அந்த இடத்தில் சமாதி கட்ட அவரது சிஷ்யர்கள் திட்டமிட்டுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications