காங்கிரஸை அழிக்கவே அதிமுகவுக்கு ஆதரவு-சீமான்

தேனி மாவட்டம் சின்ன மனூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் முல்லைப் பெரியாறு மீட்பு விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு சீமான் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில்,
முல்லை பெரியாறு பிரச்சினை, காவிரி பிரச்சினை, மீனவர் பிரச்சினை போன்ற பிரச்சினைகளை தீர்க்க நாம் தமிழர் என்ற ஒற்றுமையுடன் தமிழர்கள் அனைவரும் போராட வேண்டும். அப்போது தான் வெற்றி கிடைக்கும். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிடம் நான் பணப்பெட்டி வாங்கி கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்பதாக தவறான தகவல்களை சிலர் பரப்பி வருகின்றனர்.
இலங்கை தமிழர்களை கொன்று குவித்த காங்கிரசை அடியோடு அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நான் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக உள்ளேன்.
காங்கிரசுக்கு உறுதுணையாக உள்ள தி.மு.க. அரசையும் வருகிற தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். எனவே வருகிற சட்ட மன்ற தேர்தலில் காங்கிரசை எதிர்த்து நிற்கும் அ.தி.மு.க., ம.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி சார்பில் வீடு, வீடாக பிரசாரம் செய்யப்படும்.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை சீட் கொடுக்கப்படும் என்று காங்கிரஸ்காரர்களை விட நான் மிக ஆர்வமாக உள்ளேன். ஏனென்றால் காங்கிரஸ் வேட்பாளர்களை அனைத்து தொகுதிகளிலும் தோற்கடிக்க வேண்டும் என்பதே எனது லட்சியம். அப்படி செய்தால் தான் இலங்கை தமிழர்களின் ஆத்மா சாந்தி அடையும்.
தேர்தலில் ஒரு ஓட்டுக்கு 5 ஆயிரம் பணம் தருவார்கள். அந்த பணம் யாருடையது என்று பணம் கொடுப்பவர்களிடம் கேள்வி கேளுங்கள். ஏனென்றால் அந்த பணம் அனைத்தும் நம்முடையது. எனவே ஓட்டுக்கான பணம் தருவதை பெற்று கொண்டு காங்கிரசுக்கு எதிராக வாக்களியுங்கள் என்றார் சீமான்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications