நீதிமன்ற கட்டிட பிரச்சனை: திருச்செந்தூரில் வக்கீல்கள் இன்று உண்ணாவிரதம்

Subscribe to Oneindia Tamil

திருச்செந்தூர்: திருச்செந்தூர் புதிய நீதிமன்ற கட்டிட பணியில் தரமற்ற பொருட்களை பயன்படுத்துவதற்கு கண்டனம் தெரிவித்து வக்கீல்கள் இன்று நீதிமன்றத்தை புறக்கணித்து உண்ணாவிரதம் இருந்தனர்.

திருச்செந்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இதற்காக அரசு ரூ.2 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது.

கட்டிடத்திற்கு பயன்படுத்தப்படும் செங்கல், மண், இரும்பு கம்பிகள் தரமற்றதாக இருப்பதாக ஆய்வு செய்த வக்கீல் சங்க குழுவினர் குற்றம் சாட்டினர். இது குறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து பொது பணித்துறை மண்டல முதன்மை பொறியாளர் தலைமையிலான குழுவினர் நேரில் வந்து ஆய்வு செய்தனர். அதன் பிறகு கட்டிட பணி நிறுத்தப்பட்டது.

தரமற்ற பொருட்களை பயன்படுத்தியதற்கு கண்டனம் தெரிவித்து கடந்த 25-ம் தேதி முதல் இன்று வரை நீதிமன்ற புறக்கணிப்பு செய்வதென்று வக்கீல்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்தனர். அதன்படி கடந்த 25-ம் தேதி முதல் நீதிமன்றத்தை புறக்ககணித்து வருகின்றனர். இன்று வக்கீல்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்டடனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+