27ம் தேதி திருச்சியில் மாநில மாநாடு-தயாராகிறது திமுக
திருச்சி: தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி விட்ட நிலையில், திருச்சியில் வருகிற 27ம் தேதி பிரமாண்ட மாநில மாநாட்டை கூட்டியுள்ளது திமுக. அக்கூட்டத்தில் பல முக்கிய அறிவிப்புகளை கட்சி வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி, திருவானைக்காவல் அருகே 60 ஏக்கர் நிலப்பரப்பு மாநாட்டுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தை சீர்படுத்தும் பணி நடந்து வருகிறது. இங்குதான் திமுகவின் 10வது மாநில மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
மேலும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் 3 நாள் மாநாடாக இது திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது தேர்தல் நெருங்கி விட்டதால், ஒரு நாள் மாநாடாக மாற்றப்பட்டுள்ளது. மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கி 10 மணிக்கு முடிவடையும். இறுதி நிகழ்ச்சியாக முதல்வர் கருணாநிதி சிறப்புரையாற்றுவார்.
மிகப் பெரிய மாநாடாக இதை மாற்றிக் காட்ட வேண்டும் என்பதற்காக திருச்சி மாவட்ட திமுகவினர் முழு வீச்சில் களம் இறங்கியுள்ளனர்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications