கோவையில் கொலையான சிறுமி-கொலையான பிறகு கற்பழிக்கப்பட்ட கொடூரம்
கோவை: கோவையில் கருகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சிறுமியை, கொலை செய்து பின்னர் கற்பழித்துள்ளான் குற்றவாளி என்று தெரிய வந்துள்ளது. இதனால் கோவையே அதிர்ந்து போயுள்ளது. அந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டதாக ஒருவனை போலீஸார் பிடித்துள்ளனர்.
கோவை பீளமேடு உடையாம்பாளையம், திருமால் நகர் அசோக் வீதியை சேர்ந்தவர் கோவிந்தன் (55). கட்டிட வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கோவிந்தம்மாள் (50). இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். 2 மகள்களுக்கு திருமணம் நடைபெற்றுவிட்டது. கோவிந்தம்மாளின் இளைய மகள் அனுஷ்யா (7). இச்சிறுமி உடையாம்பாளையத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 2-வது வகுப்பு படித்து வந்தாள்.
கோவிந்தம்மாள், சேலம் அருகே உள்ள செல்லப்பநாயக்கனூருக்கு தன்னுடைய மகளை பார்க்க சென்று இருந்தார். அப்போது சிறுமி அனுஷ்யா, தந்தை கோவிந்தனுடன் இருந்தார்.
நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் சிறுமி அனுஷ்யா வீடு திரும்பினாள். பின்னர் தனது அண்ணன் வீரமுத்துவுடன் (12) விளையாடிக் கொண்டு இருந்தாள்.
இந்த நிலையில், அங்கு இரவு ஏழரை மணியளவில் அனுஷ்யாவின் மாமாவான குமார் என்பவர் அங்கு வந்துள்ளார். சிறுமியிடம் சிகரெட் வாங்கி வருமாறு கூறியுள்ளார். சிகரெட்டின் பெயர் தெரியாததால் கடையிலிருந்து மீண்டும் வீடு திரும்பினால் அனுஷ்யா. பின்னர் பெயரைக் கேட்டுக் கொண்டு மீண்டும் கடைக்குச் சென்றாள். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து கோவிந்தன் அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தார். பின்னர் போலீஸில் புகார் கொடுத்தார்.
இந்தச நிலையில் நாயக்கனூர் தோட்டம் பகுதியில் கருகிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டாள் அனுஷ்யா.
உடல் முழுவதும் கருகிப் போய் காணப்பட்டது. முகத்தை நாய்கள் கடித்துக் குதறியிருந்தன. இடது கையையும் நாய்கள் கடித்திருந்தன. சிறுமியின் உடல் கிடந்த இடத்திற்கு அருகே காலி மது பாட்டில்களும் கிடந்தன
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. போலீஸார் தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். கோவிந்தன் தரப்பில் விசாரணை நடத்தியபோது கோவிந்தனின் உறவினர் ஒருவர் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அந்த நபரைப் பிடித்து விசாரித்தபோது உண்மையை ஒப்புக் கொண்டார்.
இந்த நபர், சிறுமியை கடத்திச் சென்று முதலி்ல கொலை செய்துள்ளார். அதன் பின்னர் கொடூரமான முறையில் கற்பழித்துள்ளார். அதன் பின்னர் சிறுமியின் உடலில் பெட்ரோலை ஊற்றி தீவைத்துள்ளார். அந்த நபரைப் போலீஸார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்தான் முஷ்கின் என்ற சிறுமியும், அவளது தம்பி ரித்திக்கும் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டனர். முஷ்கின் பாலியல் பலாத்காரமும் செய்யப்பட்டாள். இந்த அதிர்ச்சி சம்பவத்தை நடத்திய இரு குற்றவாளிகளில் ஒருவனான மோகன கிருஷ்ணன் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.
இந்த நிலையில் மீண்டும் கோவையில் ஒரு பரபரப்பு கற்பழிப்பு மற்றும் கொலைச் சம்பவம் நடந்துள்ளது அனைவரையும் அதிர வைத்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications