பட்ஜெட் வீடுகள்: ரூ 3000 கோடி முதலீடு செய்யும் டாடா!

ஏற்கெனவே இதுபோன்ற 5 திட்டங்களை சென்னை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் செயல்படுத்தும் பணியில் உள்ளது டாடா. இப்போது இரண்டாம் கட்ட முக்கிய நகரங்களில் மேலும் 8 பட்ஜெட் வீடுகள் திட்டத்தை செயல்படுத்தவிருக்கிறது.
இந்த வீடுகள் ஒவ்வொன்றும் ரூ 5 லட்சம் முதல் 35 லட்சம் வரையிலான விலையில் இருக்கும். இந்தத் திட்டத்துக்கென்றே ஸ்மார்ட் வேல்யூ ஹோம்ஸ் என்ற புதிய துணை நிறுவனத்தையும் தொடங்கியுள்ளது டாடா.
"சொந்த வீடு என்ற கனவில் உள்ள அனைவருக்கும் வீடு கிடைக்கச் செய்யும் திட்டம்தான் டாடாவின் பட்ஜெட் வீடுகள் திட்டம். இதற்காக உடனடியாக ரூ 2500 கோடி முதல் 3000 கோடி வரை முதலீடு செய்யவிருக்கிறோம்" என்கிறார் டாடா ஹவுஸிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ப்ரோடின் பானர்ஜி.
இந்த ஸ்மார்ட் வேல்யூ நிறுவனத்தின் சார்பில் இப்போது மும்பை, புனே மற்றும் சென்னையில் தலா ஒரு வீட்டுவசதித் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. 10 முதல் 12 மில்லியன் சதுர அடி பரப்பளவில் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
அடுத்த அகமதாபாத் மற்றும் பெங்களூருவில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மும்பையில் இரண்டாவது புராஜெக்ட் கொண்டுவரும் திட்டமும் உள்ளதாம். 2011-2012-ல் இந்த வீடுகள் விற்பனைக்கு வரும்.
இதற்கு அடுத்து லூதியானா, ஜலந்தர் மற்றும் சண்டிகரில் குறைந்த விலை வீடுகள் கட்டி விற்கப்படும் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications