For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐநா மனித உரிமை கவுன்சிலிலிருந்து லிபியா சஸ்பென்ட்!

By Shankar
Google Oneindia Tamil News

Ban Ki Moon
வாஷிங்டன்: ஐநாவின் மனித உரிமைகள் கவுன்சிலில் லிபியாவின் உறுப்பினர் உரிமையை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்காக ஐநாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது அமெரிக்கா.

லிபியாவில் கலவரக்காரர்களுக்கும் அதிபரின் படைகளுக்குமிடையே பெரும் மோதல் நடந்து வருகிறது. கலவரத்தை அடக்க விமானங்கள் மற்றும் பீரங்கிப் படையைப் பயன்படுத்தி வருகிறார் கடாபி.

இதனால் லிபியாவை மனித உரிமைகள் கவுன்சிலிலிருந்து சஸ்பென்ட் செய்வதாக அறிவித்துள்ளது ஐநா சபை.

இதற்கு பாராட்டு தெரிவித்துள்ள அமெரிக்கா, 'தனது மக்களுக்கு எதிராக துப்பாக்கியை நீட்டும் அரசுகளுக்கு மனித உரிமைகள் கவுன்சிலில் இடமில்லை' என்பதை ஐநா சபை தெளிவுபடுத்தியுள்ளதாகக் கூறியுள்ளது.

ஐநா மனித உரிமை கவுன்சிலில் உள்ள எந்த நாடும் அதன் உறுப்பினர் பதவியை இழந்ததில்லை. முதல்முறையாக இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லிபியாவின் இதுபோன்ற வன்முறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற தகவலை சர்வதேச சமூகம் ஒருமித்த குரலில் பேச வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்தார்.

குற்றங்களுக்கு கடாஃபி அரசை பொறுப்பாக்க கூடுதல் நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக சர்வதேச சமூகத்துடன் அமெரிக்கா தொடர்ந்து இணைந்து செயல்படும். தேவைப்படுவோருக்கு மனிதாபிமான உதவியும் வழங்கும். ஜனநாயக மாற்றத்தை செயல்படுத்த லிபிய மக்களுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்றும் அவர் கூறினார்,

English summary
The United Nations General Assembly has unanimously suspended Libya's membership in the UN Human Rights Council because of Moamar Gaddafi's violent crackdown on protesters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X