13 பேய் நம்பர்... பேயை விரட்டும் நாளுக்கான நம்பர்! - விஜயகாந்த்

தெய்வத்தோடும் மக்களோடும்தான் கூட்டணி என்று கூறி, தன்னை தனித்தன்மை மிக்கவராகக் காட்டி, மக்களின் வாக்குகளை கடந்த தேர்தல்களில் கவர்ந்து, தனி வாக்கு வங்கியை உருவாக்கிக் கொண்டு விட்ட விஜயகாந்த், வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து பலே பல்டி அடித்துள்ளார்.
இது தொடர்பாக தேமுதிக நிர்வாகிகள் பண்ருட்டி ராமச்சந்திரன், சுதீஷ், சுந்தர்ராஜன் ஆகியோர் அதிமுக தலைமைக் கழகத்திற்கு சென்று ஆலோசனை நடத்தினர். ஆனாலும் சீட் விஷயத்தில் விஜயகாந்தின் பேராசைக்கு தீனி போட முடியாது என அமைதி காக்கிறார் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா.
இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், இன்று புதன்கிழமை கட்சி அலுவலகத்துக்கு வந்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
கேள்வி: கூட்டணி தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை எப்போது சந்திப்பீர்கள்?
பதில்: இப்போது சொல்ல முடியாது.
கேள்வி: அதிமுக கூட்டணியில் உங்கள் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும்?
பதில்: அதையும் இப்போது சொல்ல முடியாது. இன்னும் இரண்டு நாள் பொறுத்திருங்கள். உங்களைத்தான் முதலில் சந்தித்து அதைப் பற்றி தெரிவிப்பேன், என்றார்.
கேள்வி: தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 13 - ரிசல்டோ மே 13 என்று அறிவிக்கப்பட்டிருக்கிறதே?
பதில்: 13 என்பது பேய் நம்பர். தமிழ் நாட்டை பிடித்திருக்கும் ஊழல் என்ற பேயையும், விலைவாசி என்ற பேயையும் அகற்றுவதற்கு இந்த நம்பர் உதவும், என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications