காமன்வெல்த் ஊழல்... பிரசார் பார்தி சிஇஓ வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை!
டெல்லி: காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பாக மத்திய அரசின் பிரசார் பார்தி நிறுவன சிஇஓ பிஎஸ் லல்லியின் வீட்டில் சிபிஐ இன்று அதிரடி சோதனை மேற்கொண்டது.
டெல்லியில் சில வாரங்களுக்கு முன் நடந்த காமன்வெல்த் போட்டியில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விழாக் குழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த சுரேஷ் கல்மாடி இது தொடர்பாக எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படும் சூழல் உள்ளது.
இந்த ஊழலில் அரசின் அதிகாரிகள் பலருக்கும் பெரிய அளவில் தொடர்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பிரசார் பாரதி அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி பி எஸ் லல்லியும் ஒருவர். இந்தப் போட்டியின் ஒளிபரப்பு உரிமையை ரூ 246 கோடிக்கு பிரிட்டிஷ் நிறுவனத்துக்கு கொடுத்த விவகாரத்தில் ரூ 135 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது அரசுக்கு.
இதுதொடர்பாக இவர் மீது சிபிஐ ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை அவரது டெல்லி வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
காலை ஆரம்பித்த சோதனை பிற்பகல் வரை தொடர்ந்தது. 1971-ஆண்டு பேட்சை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி லல்லி. இந்த ஊழல் காரணமாக அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இந்தியாவைச் சேர்ந்த ஜூம் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன உரிமையாளர் வாஸிம் அகமத் டெல்வியின் அலுவலகம் மற்றும் வீடுகளிலும் இன்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. லல்லி ஒப்பந்தம் செய்த பிரிட்டிஷ் நிறுவனத்திடமிருந்து ஒளிபரப்பு உரிமையை சப் காண்ட்ராக்ட் பெற்ற நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications