திமுக கூட்டணியில் கொங்கு நாடு முன்னேற்ற கழகம் கோரும் தொகுதிகள்
சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தலில் கொங்குநாடு முன்னேற்ற கழகம் தான் போட்டியிட விரும்பும் 15 தொகுதிகளின் பட்டியலை திமுகவிடம் கொடுக்கவுள்ளது.
திமுக கூட்டணியில் கொங்குநாடு முன்னேற்ற கழகத்துக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பல ஆணடுகளாக கொங்கு மண்டலத்தில் அதிமுகவிடம் மரண அடி வாங்கி வருகிறது திமுக. இந்தப் பகுதியில் மக்களவைத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல்களில் திமுகவுக்கு பெரும் தோல்வியே ஏற்பட்டு வருகிறது.
இதையடுத்து முதன்முதலாக கொங்கு முன்னேற்றக் கழகத்துடன் திமுக கூட்டணி அமைத்துள்ளது. இந்த நிலையில் இந்தக் கட்சி போட்டியிட விரும்பும் 15 தொகுதிகளை அடையாளம் கண்டுள்ளது. அதை திமுகவிடம் அந்தக் கட்சி தரவுள்ளது. இதில் 7 தொகுதிகளை திமுக அந்தக் கட்சிக்கு வழங்கும்.
இது குறித்து கொங்கு நாடு முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் அளித்துள்ள பேட்டியி்ல்,
கொங்கு மண்டலத்தின் வளர்ச்சியை மையமாக வைத்தே திமுகவுடன் கூட்டணி முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுவே எங்கள் நோக்கமாகும். தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றிக்கு முழுமையாக பாடுபடுவோம். கொ.மு.க. போட்டியிடும் 7 தொகுதிகளை தேர்வு செய்வதற்கு 15 தொகுதிகளை தேர்வு செய்து ஓரிரு நாட்களில் திமுக குழுவிடம் கொடுக்கப்படும் என்றார்.
அந்தக் கட்சி பொள்ளாச்சி, திருப்பூர் வடக்கு, அந்நியூர், காங்கேயம், தொண்டமுத்தூர், மடத்துகுளம், அரவக்குறிச்சி, உடுமலைப்பேட்டை, பல்லடம், ஈரோடு மேற்கு, கோபி உள்ளிட்ட தொகுதிகள் கேட்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications