தமிழகத்தில் விடுதலைப் புலிகள் யாரும் இல்லை-லத்திகா சரண்
சென்னை: தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் எதுவும் இயங்கவில்லை. இதுதொடர்பாக இலங்கை பிரதமர் ஜெயரத்னே கூறிய தகவல் தவறானது என்று டிஜிபி லத்திகா சரண் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்கள் இருப்பதாகவும், நெடியவன், விநாயகம், ருத்ரகுமாரன் ஆகியோர் இந்த முகாம்களை அமைத்திருப்பதாகவும் இலங்கை பிரதமர் ஜெயரத்னே கூறியிரு்நதார். இதை உடனடியாக டிஜிபி லத்திகா சரண் மறுத்துள்ளர்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக, கேரள எல்லையில் விடுதலைப் புலிகளுக்கான பயிற்சி முகாம்கள் ரகசியமாக இயங்கி வருகின்றன என இலங்கை நாடாளுமன்றத்தில் அந் நாட்டு பிரதமர் டி.எம்.ஜெயரத்னே கூறியதாக நாளேடுகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த தகவல்கள் உண்மைக்கு மாறானது, அடிப்படை இல்லாதது.
விடுதலைப் புலிகள் குறித்து தமிழக போலீஸின் புலனாய்வுத் துறை விழிப்புடன் இருந்து கண்காணித்து வருகிறது.கடலோரப் பாதுகாப்புக் குழுவுடன் இணைந்து தமிழகத்தில் உள்ள கடலோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த வி. ருத்ரகுமாரன், நார்வேயைச் சேர்ந்த நெடியவன், விநாயகம் ஆகியோரும் இத்தகவல்களை மறுத்துள்ளனர். இலங்கையில் உள்நாட்டுப் போரை நடத்தவும், தமிழக தலைவர்களைக் கொல்லவும் இங்கு விடுதலைப் புலிகள் பயிற்சி முகாம்களை நடத்தி வருவதாகக் கூறப்பட்டுள்ள தகவல்கள் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாதது.
மேலும், சென்னையில் புத்த மடம் தாக்கப்பட்டது விடுதலைப் புலிகளால் அல்ல, இந்த தாக்குதல் தொடர்பாக இலங்கைத் தமிழர் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications