வயலார் ரவி மகளுக்கு சீட் தர கேரள இளைஞர் காங். எதிர்ப்பு
திருவனந்தபுரம்: மத்திய அமைச்சர் வயலார் ரவியின் மகளுக்கு டிக்கெட் தர கேரள இளைஞர் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கேரளாவில் ஏப்ரல் 13ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில் காங் கூட்டணி ஆட்சியை கைப்பற்றினால் உம்மன் சாண்டி முதல்வராவார் என்று கூறப்பட்டது, ஆனால் தற்போது இந்த பதவிக்கு கேரள காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலாவும் போட்டியிட தீர்மானித்துள்ளார்.
இதற்கிடையே மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் வயலார் ரவியும் முதல்வர் பதவிக்கு போட்டியிட இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் முதல்வர் பதவி மீது தனக்கு ஆசை இல்லை என்று நேற்று முன்தினம் கொச்சியில் வயலார் ரவி கூறினார். ஆனால் தேர்தலில் தனது மகள் லட்சுமி போட்டியிட விரும்புவதாகவும் கூறினார்.
இந்நிலையில் லட்சுமிக்கு சீட் கொடுக்க கோட்டயம் மாவட்ட இளைஞர் காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கோட்டயத்தில நேற்று நடந்த மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் வயலார் ரவி மகளுக்கு தேர்தலில் சீட் கொடுக்க கூடாது என்றும் அரசியலில் அனுபவம் உள்ளவர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் வயலார் ரவிக்கு கடும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications