ஆயிரம் விளக்கிலிருந்து வேளச்சேரிக்கு மாற ஸ்டாலின் திட்டம்?

முக்கிய அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் ஒரே தொகுதியில், அதுவும் பாதுகாப்பான தொகுதியில் தொடர்ந்து போட்டியிடுவது வழக்கம். முதல்வர் கருணாநிதி சில ஆண்டுகளாகவே தொடர்ந்து சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வருகிறார். அதேபோல ஜெயலலிதா, ஆண்டிப்பட்டி தொகுதியிலிருந்து போட்டியிட்டு வருகிறார். மு.க.ஸ்டாலின் ஆயிரம் விளக்கு தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வருகிறார்.
ஆனால் வருகிற சட்டசபை தேர்தலில் இந்த மூவருமே தொகுதி மாறிப் போட்டியிடப் போவதாக செய்திகள் கூறுகின்றன.
முதல்வர் கருணாநிதி திருவாரூரிலிருந்து போட்டியிடலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதா ஸ்ரீரங்கம் அல்லது கோவை பக்கம் கவுண்டம்பாளையம் தொகுதியில் நிற்கலாம் என்று தெரிகிறது. அதேபோல மு.க.ஸ்டாலின், வேளச்சேரி தொகுதியிலிருந்து போட்டியிடக் கூடும் என்று கூறப்படுகிறது.
தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கையின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தொகுதிதான் வேளச்சேரி. வேளச்சேரி தொகுதியின் கீழ் வரும் பகுதிகள் முன்பு தாம்பரம் தொகுதியில் இடம் பெற்றிருந்தன.
திமுகவின் கோட்டையாக திகழும் தொகுதிகளில் தாம்பரமும் ஒன்று. அந்தத் தொகுதியின் கீழ் முன்பு வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகள் இருந்ததால், இந்த தொகுதி திமுகவுக்கு சாதகமானதாக கருதப்படுகிறது.
ஸ்டாலின், வேளச்சேரி தொகுதியை தேர்வு செய்ய இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. இங்குதான் ஸ்டாலினின் வீடு உள்ளது. தற்போது அவர் இங்கு வசிக்கவில்லை என்ற போதிலும்,அவர் முன்பு இங்கு குடியிருந்ததால், தொகுதி மக்களிடம் நல்ல பெயர் உள்ளது. எனவே ஸ்டாலின் இங்கு போட்டியிட வேண்டும் என்பது இப்பகுதி திமுகவினரின் விருப்பமாகும்.
அதேசமயம், இப்பகுதியில் வசித்து வரும் மதிமுக முக்கியத் தலைவர்களில் ஒருவரான மணிமாறனும் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட கட்சித் தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளார். அவரும் களம் இறங்கினால் போட்டி கடுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கடுமையான உழைப்பாளியான மணிமாறன், சிறந்த பீல்ட் ஒர்க்கரும் கூட என்பதால் பிரசாரத்தில் கடுமையாக ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கலாம்.
ஸ்டாலின் இத்தொகுதியில் போட்டியிட முடிவு செய்தால் இந்தத்தொகுதியின் பிரசாரக் களம் படு சூடாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
-
இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக மு.க ஸ்டாலின் என்னிடம் கூறவில்லை - காங்கிரஸ் ப.சிதம்பரம் -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications