சென்னையில் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி-கட்சிகளுடன் ஆலோசனை
சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி சென்னை வந்துள்ளார். அவரும், மற்ற இரு தேர்தல் ஆணையர்களும் இன்று அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.
தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 13ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் வருகிற 19ம் தேதி தொடங்குகிறது.
இதையடுத்து தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யவும், அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தவும் குரேஷி தலைமையில் தேர்தல் ஆணையர்கள் சென்னை வந்துள்ளனர்.
இன்று அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களிடம் தேர்தல் நடத்தை விதிகளைக் கடைப்பிடிப்பது குறித்து குரேஷி ஆலோசனை நடத்துகிறார். அதேபோல தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார், காவல்துறை அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகளுடனும் குரேஷி ஆலோசனை நடத்துகிறார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் இந்த முறை கடுமையாக்கப்பட்டுள்ளன. பல்வேறு கட்டுப்பாடுகளையும் தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. பணப் புழக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக அது எடுத்து வரும் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. கடந்த சில நாட்களில் மட்டும் ரூ. 15 கோடி அளவுக்குப் பணம், நகைககள், சேலைகள் சிக்கியுள்ளன.
இதுகுறித்து அரசியல் கட்சிகளிடம் விளக்கு கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளுமாறு குரேஷி வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications