மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ரவுடிகள் புகுந்து தாக்குதல்-மாணவர்கள் சாலை மறியல்
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லூரிக்குள் புகுந்த ரவுடி கும்பல் மாணவர்களைத் தாக்கியது. மாணவர்களும் திருப்பித் தாக்க பெரும் ரகளை ஏற்பட்டது.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சமீப காலமாக முதல்வர் பதவி தொடர்பான பிரச்சனைகள் இருந்து வருகிறது. இதனால் கல்லூரி இயல்வு நிலையில் இல்லை. இந்நிலையில் ரவுடிக் கும்பல் ஒன்று கல்லூரிக்குள் நுழைந்து மாணவர்களைத் தாக்கியுள்ளது. இதனால் ரவுடிகளுக்கும், மாணவர்களுக்கும் இடையே அடிதடியாகிவிட்டது.
இதையடுத்து மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுத்தனர்.
இந்த நிலையில் ரவுடிகளை கல்லூரியில் இருந்து வெளியேற்றுமாறு உண்ணாவிரதம் இருந்த மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications