பணவீக்கம் 8.31 சதவீதமாக உயர்வு.. வட்டி வீதமும் உயர்ந்தது!
டெல்லி: மொத்த விலைக் குறியீட்டெண் கணக்குப்படி பிப்ரவரி மாத பணவீக்கம் 8.31 சதவீதமாக உயர்ந்துள்ளது.
எரிபொருள் மற்றும் உற்பத்தித் துறைப் பொருள்களுக்கான விலை உயர்ந்ததால் பணவீக்கமும் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட புள்ளி விவரக் குறிப்பில், ஜனவரி மாதம் பணவீக்கம் 8.23 அளவுக்கு இருந்ததாகவும், இந்த மாதம் அது 8.31 ஆக உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பணவீக்கம் 9.42 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
உணவுப் பணவீக்கம் மற்றும் பொதுப் பணவீக்கத்தின் அளவு இன்னும் கவலை தரும் அளவிலேயே இருப்பதாகவும், பணவீக்கத்தைக் குறைப்பதில் அரசு அதிக கவனம் செலுத்தும் என்றும் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
மார்ச் மாத முடிவில் 7 சதவீதத்துக்கு பொதுப் பணவீக்கத்தைக் கொண்டு வரமுடியும் என்றும் அவர் கூறினார்.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மீண்டும் வட்டி வீதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தக்கூடும் என்றும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications