ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு-31ம் தேதி ராசா உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
Subscribe to Oneindia Tamil

கடந்த பிப்ரவரி மாதம் ராசா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி பல தகவல்களைப் பெற்றது சிபிஐ. இதையடுத்து அவர்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று தனது விசாரணை நிலவர அறிக்கையை சிபிஐ உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் இந்த வழக்கில் முக்கிய குற்றப்பத்திரிக்கை மார்ச் 31ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராசா மற்றும் 2 நிறுவனங்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.
இதற்கிடையே ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரிக்க தனி கோர்ட் அமைக்கப்படவுள்ளது. மார்ச் 29ம் தேதி இந்த கோர்ட் அமைக்கப்படும். இந்த வழக்கின் சிறப்பு அரசு வழக்கறிஞர் பெயரை குறிப்பிடுமாறும் சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications