16 வருடமாக தர்மபுரியில் தொகுதிகள் இல்லை-தங்கபாலுவுக்கு காங். கண்டனம்

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி: கடந்த 16 வருடமாக தர்மபுரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்காமல் காங்கிரஸ் தலைமை புறக்கணித்து வருகிறது. இதை ஏற்க முடியாது. எனவே வருகிற தேர்தலில் மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என்று மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்படவில்லை. இதனால் அம்மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கடும் கொதிப்படைந்துள்ளனர்.

இன்று மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜவீரப்பன் தலைமையில் அவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அப்போது ராஜவீரப்பன் கூறுகையில், கடந்த 16 வருடமாக தர்மபுரி மாவட்டத்தை காங்கிரஸ் தலைமையும், கூட்டணித் தலைமையும் புறக்கணித்து வருகின்றன.

இதை ஏற்கவே முடியாது. தற்போதும் தர்மபுரியில் காங்கிரஸுக்கு இடம் கிடைக்கவில்லை. இதற்கு தங்கபாலுவும், ஐவர் குழுவும்தான் காரணம். வேண்டும் என்றே தர்மபுரி விஷயத்தில் பாராமுகமாக நடந்து கொள்கிறார் தங்கபாலு.

எனவே, வருகிற சட்டசபைத் தேர்தலில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என்றார் அவர்.

இளைஞர் காங்கிரஸாரின் இந்த அறிவிப்பால் தர்மபுரி திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+