நான் வாக்காளர்களுக்கு ஒருபோதும் பணம் தரவில்லை-கார்த்தி சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் வாக்காளர்களுக்கு ஒருபோதும் பணம் தரவில்லை. விக்கிலீக்ஸ் தகவலை நான் முழுமையாக மறுக்கிறேன் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மறுத்துள்ளார்.

நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆகியோர் கடந்த தேர்தல்களில் பெருமளவில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தாக விக்கிலீக்ஸ் கூறியதாக இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதை கார்த்தி சிதம்பரம் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த தகவலை நான் தார்மீகமாக மறுக்கிறேன். நானோ அல்லது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேறு யாருமோ வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் செயலில் ஒருபோதும் ஈடுபட்டதில்லை.

நானும் சரி எனது தந்தையும் சரி எந்த சட்டவிரோதமான காரியத்தையும் செய்யவில்லை. வாக்குகளைப் பெறுவதற்காக நாங்கள் பணம் எதையும் தரவில்லை. ஒருபோதும் நான் சட்டத்தை மீறி செயல்பட்டதில்லை. செய்யவும் மாட்டேன்.

விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவல்களை நான் பொருட்படுத்த விரும்பவில்லை. அதில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை அறியக் கூட நான் விரும்பவில்லை. இதில் உண்மை இல்லை என்பதை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+