234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்-ஸ்டாலின்
சென்னை: துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.
தொடர்ந்து, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வந்த மு.க.ஸ்டாலின் முதல் முறையாக தொகுதி மாறி, கொளத்தூரில் நிற்கிறார். இத்தொகுதி புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதியாகும்.
திமுக வேட்பாளர் பட்டியலை கட்சித் தலைவர் கருணாநிதி அறிவித்ததைத் தொடர்ந்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் தனது தொகுதிக்குச் சென்று திமுகவினர் மத்தியில் பேசி உற்சாகமாக பணியாற்றுமாறு கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து இன்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி ராஜரத்தினத்திடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக கூட்டணியின் வெற்றி சிறப்பாக உள்ளது. 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெறுவார்கள் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications