For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மார்ச் 24ல் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் தொடக்கம்-மதுரை, சேலத்தில் இல்லை!

Google Oneindia Tamil News

சென்னை: துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 24ம் தேதி தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார். இருப்பினும் அவரது பிரசாரப் பயணப் பட்டியலில் மதுரை, சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்கள் இடம் பெறவில்லை.

ஸ்டாலின் பிரசார சுற்றுப்பயண விவரம்:

மார்ச் 24 - புதுக்கோட்டை.
மார்ச் 25 - திருச்சி.
மார்ச் 26, 27 - கொளத்தூர்.
மார்ச் 28 - கன்னியாகுமரி
மார்ச் 29 - தூத்துக்குடி
மார்ச் 30 - நெல்லை.
மார்ச் 31 - விருதுநகர்.
ஏப்ரல் 1- காஞ்சிபுரம்.
ஏப்ரல் 2 - கொளத்தூர்.
ஏப்ரல் - 3 கோயம்பத்தூர்
ஏப்ரல்4 - திருப்பூர்.
ஏப்ரல் 5 - ஈரோடு
ஏப்ரல் 6 - நாமக்கல்
ஏப்ரல் 7 - கொளத்தூர்
ஏப்ரல் 8 - வேலூர்
ஏப்ரல் 9 - திருவள்ளூர்
ஏப்ரல் 10, 11 - வட சென்னை மற்றும் தென் சென்னை.

மதுரை, சேலம் ஏன் இல்லை?

ஸ்டாலினின் பிரசாரப் பட்டியலில் மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்கள் ஏன் இடம் பெறவில்லை என்று தெரியவில்லை. சேலத்தில் பெரும்பாலான தொகுதிகளில் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவாளர்களே போட்டியிடுவதும், அங்கு ஸ்டாலின் ஆதரவாளர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதுமே காரணம் என்று ஒரு பேச்சு நிலவுகிறது. வீரபாண்டி ஆறுமுகத்தை எதிர்த்து அங்கு தீக்குளிப்பு முயற்சிகள் எல்லாம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட அழகிரியின் கோட்டைகளும் ஸ்டாலினின் பிரசாரத் திட்டத்தில் இல்லை. இதுகுறித்தும் திமுகவினர் மத்தியில் சலசலப்பு எழுந்துள்ளது.

English summary
Deputy CM M.K.Stalin will kickstart his election campaign on March 24. He will tour almost all the districts except Madurai, Salem and few other districts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X