மரத்தில் ஏறி அதிமுக பிரமுகர் போராட்டம்-ஜெ வீடு அருகே நடந்த கூத்து
சென்னை: செஞ்சி தொகுதி அதிமுக வேட்பாளரை மாற்றக் கோரி அக்கட்சி பிரமுகர் ஒருவர் ஜெயலலிதா வீடு அருகே உள்ள மரத்தில் ஏறி கீழே குதிக்கப்போவதாக நூதன போராட்டம் நடத்தினார்.
நேற்று பிற்பகல் 2 மணி அளவில் போயஸ் கார்டனில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வீடு அருகே உள்ள பின்னி சந்திப்பில் பரபரப்பு ஏற்பட்டது. அதற்கு காரணம் அதிமுக பிரமுகர் ஒருவர் அங்குள்ள மரத்தில் ஏறிக் கொண்டு கீழே குதித்துவிடுவேன் என்று மிரட்டியது தான்.
இது குறித்து தகவல் அறிந்ததும் அங்கு காவலுக்கு இருந்த போலீசார் அந்த பிரமுகரை சமாதானம் செய்து கீழேஇறக்கினார்கள். பின்னர் அவர் தேனாம்பேட்டை போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
விசாரணையில் அவர் கூறியதாவது,
என் பெயர் சேட்டு(34). நான் மேல்மலையனூர் அருகேயுள்ள கொடுங்குப்பத்தைச் சேர்ந்தவன். அப்பகுதி
அதிமுக கிளைக்கழக துணை செயலாளராக இருக்கிறேன்.
செஞ்சி தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்மொழி ராஜதத்தனை மாற்றக் கோரியும், இதை ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காகவும் தான் இப்படி நூதன போராட்டம் நடத்தினேன் என்றார்.
அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்றும் உதவி கமிஷனர் ரெங்கராஜன் கூறினார்.
இதற்கிடையே நேற்று மாலை செஞ்சி தொகுதி அதிமுக கூட்டணிக் கட்சியான தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications