தேர்தல் கருத்துக்கணிப்புகளுக்கு தடை! - தேர்தல் ஆணையம்
சென்னை: பேரவைத் தேர்தலை ஒட்டிய, அனைத்துவிதமான கருத்துக் கணிப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 4 முதல் மே 10 வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
5 மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் ஏப்ரல் 4 முதல் மே 10 வரை பல்வேறு கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் வாக்குப் பதிவு ஏப்ரல் 13-ம் தேதி காலை 8 மணி முதல் 5 மணி வரை நடக்கிறது.
அசாம் மாநிலத்தில் முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 4-ம் தேதியும், மேற்கு வங்கத்தில் கடைசி கட்டத் தேர்தல் மே 10-ம் தேதியும் நடக்கிறது. இந்த தினங்களுக்குள் தேர்தல் கருத்துக் கணிப்புகளை பத்திரிகைகளில் வெளியிடக் கூடாது. தொலைக்காட்சிகளில் கருத்துக் கணிப்பு தொடர்பான எந்த நிகழ்ச்சிகளையும் வாக்குப் பதிவு முடிவடையும் முன் 48 மணி நேரத்துக்கு ஒளிபரப்பு செய்யக் கூடாது.
கருத்துக் கணிப்புகளை வெளியிடும் நிறுவனங்கள், முகமைகள் (ஏஜென்சிகள்) குறித்த விவரங்கள் வெளியிடப்பட வேண்டும். கருத்துக் கணிப்புகள் எவ்வாறு தயார் செய்யப்பட்டன; எந்த வகைகளில் மேற்கொள்ளப்பட்டன என்பன போன்ற விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். மின்னணு ஊடகங்கள் என்பன தொலைக்காட்சிகள் மட்டுமல்லாது, இணையதளம், வானொலி, உள்ளூர் கேபிள் தொலைக்காட்சி உள்ளிட்டவை அடங்கும்.
-இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications