ஸ்ரீரங்கத்தில் மனுத் தாக்கல் செய்தார் ஜெ.-திமுகவினர் கல்வீசியதால் பரபரப்ப

ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் ஜெயலலிதா மற்றும் அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் இன்றே வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர். இன்று காலை 11 மணி முதல் 1 மணிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்யுமாறு நேரம் குறித்துக் கொடுத்துள்ளார் ஜெயலலிதாவின் ஜோதிடர். அதன்படி ஜெயலலிதா உள்ளிட்டோர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர்.
இதற்காக இன்று காலை விமானம் மூலம் திருச்சி சென்றார் ஜெயலலிதா. அங்கு விமான நிலையத்தில் ஜெயலலிதாவுக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதன் பின்னர் 11 மணியளவில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்த ஜெயலலிதா அங்கு ஸ்ரீரங்கம்தொகுதிக்கான தேர்தல் அதிகாரியான குணசேகரனிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
திமுகவினர் செருப்பு-கல்வீசித் தாக்குதல்
முன்னதாக ஜெயலலிதா வேட்பு மனு தாக்கல் செய்ய வரும்போது தேர்தல் அதிகாரியின் அலுவலக வளாகத்தில் பெரும் திரளான அதிமுகவினரும், திமுகவினரும் திரண்டிருந்தனர். இதனால் அந்த இடத்தில் பதட்ட நிலை காணப்பட்டது.
அப்போது அதிமுகவினரை நோக்கி திமுகவினர் சிலர் செருப்புகளையும், கற்களையும் வீசித் தாக்கினர். இதனால் இரு தரப்பினரும் மோதும் அபாயம் ஏற்பட்டது.
இருப்பினும் போலீஸார் உடனடியாக தலையிட்டு லேசான தடியடி நடத்தி கல்வீசியவர்களையும், அங்கு கூடியிருந்தவர்களையும் கலைத்து விரட்டினர். இதனால் பதட்டம் தணிந்தது.
இதுகுறித்து பின்னர் ஜெயலலிதாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, என்னிடம் கட்சியினர் இதுகுறித்துக் கூறினர். அதுகுறித்து எனக்கு மேல் விவரம் தெரியாது என்றார்.
6வது முறையாக போட்டி
ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடுவது இது 6வது முறையாகும். இதற்கு முன்பு அவர் போட்டியிட்ட தொகுதிகள் விவரம்
1989 - போடிநாயக்கனூர்
1991 - பர்கூர்
1996 - பர்கூர் - தோல்வி
2001 - ஆண்டிப்பட்டி
2006 - ஆண்டிப்பட்டி
பிரசாரம் தொடக்கம்
இன்று மாலை தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் ஜெயலலிதா.
மாம்பழச்சாலை, பெரியார் நகர், வீரேஸ்வரம், ராகவேந்திரா வளைவு, தெப்பக்குளத்தெரு கார்னர், மேல சித்திரை வீதி, கீழ அடைய வளஞ்சான் வீதி, காந்திரோடு (தேவி தியேட்டர் அருகில்), நெல்சன் ரோடு (திருநகர் கார்னர்), சென்னை மெயின்ரோடு, திருவானைக்காவல் சன்னதி வீதி, நடுகொண்டயம் பேட்டை, அண்ணாசிலை, மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை மற்றும் பாலக்கரை ஆகிய இடங்களில் வேனில் இருந்தபடியே பேசுகிறார்.
இரவு திருச்சி சங்கம் ஓட்டலில் தங்கும் ஜெயலலிதா மறுநாள் (வெள்ளிக்கிழமை) கம்பரசம்பேட்டை, அல்லூர், ஜீயபுரம், திருப்பராய்த்துறை, காவல்காரன் பாளையம், பெட்டவாத்தலை, பெரியகருப்பூர், கோப்பு, போசம்பட்டி, கீரிக்கல்மேடு, பள்ளக்காடு (கைகாட்டி) அதவத்தூர், சோமரசம்பேட்டை, அல்லித்துறை, புங்கனூர் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.
26-ந் தேதி (சனிக்கிழமை) திருச்சி கிராப்பட்டி, எடமலைப்பட்டிபுதூர், மணிகண்டம், iனியன் ஆபீஸ், அளுந்தூர், சூறாவளிப்பட்டி, சன்னாசி பட்டி, இனாம்குளத்தூர், அலம்பட்டி புதூர், மரவனூர், சத்திரப்பட்டி, நவலூர் குட்டப்பட்டு, ராம்ஜிநகர் மில்கேட், தீரன்நகர், கருமண்டபம் ஆகிய இடங்களில் ஜெயலலிதா பிரசாரம் செய்கிறார். 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருச்சியில் இருந்து புறப்பட்டு சென்று கந்தர்வகோட்டையில் (புதுக்கோட்டை மாவட்டம்) பிரசாரம் செய்கிறார்.
அதன் பின்னர் தஞ்சை மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார். வருகிற ஏப்ரல் 11-ந் தேதி வரை மாவட்டம் வாரியாக மொத்தம் 18 நாட்கள் அவர் தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார்.
திமுகவினர் நேற்று செய்தது போல கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஒரே மேடையில் ஜெயலலிதா பேசும் திட்டம் குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல ஜோசியர் குறித்துக் கொடுத்த நேரப்படி இன்று காலை 11 மணி முதல் பகல் 1 மணிக்குள் அனைத்து அதிமுக வேட்பாளர்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஜெயலலிதா உத்தரவி்ட்டுள்ளார்.
ஜோசியர் குறித்த நேரம்:
அதே போல ஜோசியர் குறித்துக் கொடுத்த நேரப்படி இன்று காலை 11 மணி முதல் பகல் 1 மணிக்குள் அனைத்து அதிமுக வேட்பாளர்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஜெயலலிதா உத்தரவி்ட்டுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications