அதிமுக கூட்டணி-கிராம லட்சியம்- அனைத்து தொழிலாளர் முன்னணி அமைப்பு விலகல்
கரூர்: அதிமுக கூட்டணியில் இருந்து கிராம லட்சியம்- அனைத்து தொழிலாளர் முன்னணி என்ற அமைப்பு விலகியுள்ளது.
அதிமுக கூட்டணிக்கு தேமுதிக, மதிமுக, வலது கம்யூனிஸ்ட், இடது கம்யூனிஸ்ட், புதிய தமிழகம் போன்ற பல்வேறு அரசியல் கட்சிகளும், கிராம லட்சியம் - அனைத்து தொழிலாளர் முன்னணி போன்ற பல்வேறு சமூக அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து இருந்தது.
மதிமுகவிற்கு உரிய தொகுதிகள் வழங்க அதிமுக மறுத்துவிட்டது. இதனால் தங்களுக்கு உரிய முக்கியத்துவமும், தொகுதிகளும் கிடைக்கவில்லை என்று அதிமுக மீது குற்றம் சாட்டி மதிமுக வெளியேறி, தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது.
இந்த நிலையில் தொழிலாளர்கள் நலன் குறித்து பல்வேறு தகவல்களை பேசவும், குறிப்பாக அனைத்து தொழிலாளர் நல வாரியங்கள் கலைக்கப்படாமல் தொடர்ந்து நீடிக்கும் என்ற உத்தரவாதத்தை பெறவும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா- வை சந்திக்க கிராம லட்சியம்- அனைத்து தொழிலாளர் முன்னணி அமைப்பின் நிறுவன தலைவர் தலித் பாண்டியன் நேரம் ஒதுக்குமாறு கேட்டாராம். ஆனால் இதற்கு அதிமுக தரப்பில் இருந்து முறையான பதில் இல்லையாம்.
இதையடுத்து அதிமுக கூட்டணியில் இருந்து தொழிலாளர்கள் நலன் கருதி கிராம லட்சியம்- அனைத்து தொழிலாளர் முன்னணி விலகுவதாக தலித் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக அதிமுக கூட்டணியில் இருந்து பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் விலகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications