மயிலாப்பூர் தொகுதியில் டிக்கெட் மறுப்பு-அதிருப்தியில் எஸ்.வி.சேகர்
சென்னை: மயிலாப்பூரில் தனக்கே சீட் கிடைக்கும் என்ற பெரும் நம்பிக்கையுடன் இருந்த பல கட்சிகள் மாறி கடைசியில் காங்கிரஸுக்கு வந்து சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகருக்கு, தங்கபாலு சரியான ஆப்பு வைத்து விட்டார்.
ஆரம்பத்தில் பாஜகவில் இருந்தவர் சேகர். சங்கர மடத்துடன் இருந்த நெருக்கம் காரணமாக, அவர் அப்படியே அதிமுகவுக்கு மாறினார். அவரை மயிலாப்பூரில் நிற்க வைத்து வெற்றி பெற வைத்தர் ஜெயலலிதா. அதிமுகவில், ஜெயலலிதாவின் நெருக்கமான வட்டாரத்தில்தான் முதலில் இருந்தார் எஸ்.வி.சேகர். இருப்பினும் சசிகலா குரூப்புடன் ஒத்துப் போக முடியாததாலும், மைத்ரேயன் போன்றோரின் ஆதிக்கத்தைத் தாண்டி போக முடியாததாலும் ஜெயலலிதாவின் நம்பிக்கை வட்டத்திலிருந்து நழுவினார்.
படிப்படியாக ஓரம் கட்டப்பட்டு ஒதுக்கப்பட்டார் எஸ்.வி.சேகர். இதையடுத்து திமுகவுக்கு சாதகமாக நடந்து கொள்ள ஆரம்பித்தார். அதிமுகவில் எம்.எல்.ஏவாக இருந்தபடியே திமுககாரராக செயல்பட்டு வந்தார் சேகர்.
இதையடுத்து அவரை அதிரடியாக கட்சியை விட்டு நீக்கினார் ஜெயலலிதா. இருப்பினும் தனது எம்.எல்.ஏ. பதவியை விடாமல் பிடித்துக் கொண்டுள்ளார் சேகர்.
இந்த நிலையில் அவர் திமுகவில்சேரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென கம்ப்யூட்டர் மூலம் ராகுல் காந்தியைத்தொடர்பு கொண்டேன் நேரில் பார்க்கச் சொன்னார் என்று கூறி ராகுல் காந்தியை சந்தித்தார் எஸ்.வி.சேகர். பின்னர் காங்கிரஸில் இணைந்தார்.
ப.சிதம்பரம் கோஷ்டி மூலமாக இவர் காங்கிரஸில் போய்ச் சேர்ந்ததால் தங்கபாலு தரப்பு காட்டத்துடனேயே இருந்தது. இந்த நிலையில் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மயிலாப்பூரில் போட்டியிட டிக்கெட் கேட்டிருந்தார் எஸ்.வி.சேகர்.
ஆனால் எதிர்பாராத வகையில் தனது மனைவிக்கு மயிலாப்பூர் சீட்டை வாங்கி விட்டார் தங்கபாலு. இதை எதிர்பார்க்காத எஸ்.வி.சேகர் கடும் அதிருப்தியடைந்துள்ளார்.
தற்போது காங்கிரஸ் தரப்பில் திருப்பூர் தெற்கு, ராமநாதபுரம், பூந்தமல்லி ஆகிய மூன்று தொகுதி வேட்பாளர்கள் மட்டுமே அறிவிக்கப்பட வேண்டியுள்ளது. ஆனால் இதில் எந்த சீட்டும் சேகருக்கு தரப்பட வாய்ப்பில்லை என்பதால் இப்போதைக்கு எஸ்.வி.சேகரின் அரசியல் அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது.
மறுபடியும் காங்கிரஸிலிருந்து விலகி வேறு ஏதாவது கட்சிக்கு எஸ்.வி.சேகர் போவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
-
தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை! -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications