தூத்துக்குடி அதிமுக வேட்பாளர் பால் மாற்றம்-புதிய வேட்பாளர் செல்லப்பாண்டியன்
தூத்துக்குடி: தூத்துக்குடி தொகுதிக்கான அதிமுக வேட்பாளரை ஜெயலலிதா மீண்டும் மாற்றியுள்ளார். 3 வது முறையாக இங்கு வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட முதலாவது வேட்பாளர் பட்டியலில் தூத்துக்குடி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ஜெனீபர் சந்திரன் அறிவிக்கப்பட்டிருந்தார். பின்னர் ஜெயலலிதா வெளியிட்ட திருத்தப் பட்டியலில் ஜெனீபர் நீக்கப்பட்டு ஏ. பால் என்பவரை சேர்த்திருந்தனர்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் வேட்பாளரை மாற்றியுள்ளார் ஜெயலலிதா. அதன்படி செல்லப்பாண்டியன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தூத்துக்குடி சட்டசபை தொகுதிக்கு கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பால் என்பவருக்கு பதிலாக, தூத்துக்குடி மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலர் செல்லப்பாண்டியன் அதிகாரப்பூர்வ வேட்பாளராக நிறுத்தப்படுகிறார் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications