கொளத்தூரில் முக ஸ்டாலின் - விஜய்காந்த் அனல் பிரச்சாரம்!!

தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது. முதல்வர் கருணாநிதி 23-ந்தேதி திருவாரூரில் பிரசாரத்தை தொடங்கினார். 2-ந்தேதி தஞ்சையிலும், நேற்று திருச்சியிலும் பிரசாரம் செய்தார். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று முன்தினம் ஸ்ரீரங்கம் தொகுதியில் பிரசாரம் செய்தார். இன்றும், நாளையும் திருச்சி மற்றும் புறநகர் பகுதிகளில் பிரசாரம் செய்கிறார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிசாரத்தைத் தொடங்கினார்.
நேற்று சிவகங்கை மாவட்டத்தில் பிரசாரம் செய்தார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று முன்தினம் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் பிரசாரம் செய்தார்.
நேற்று மதுராந்தகம், செங்கல்பட்டு, தாம்பரம் பகுதிகளில் பிரசாரம் செய்தார். மு.க.ஸ்டாலின் இன்று அவர் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்கிறார். மாலை 3 மணிக்கு சென்னை 51-வது வார்டு திரு.வி.க.நகர் கோபாலபுரம் சந்திப்பில் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு பிரசாரத்தைத் தொடங்குகிறார்.
தொடர்ந்து 52, 53-வது வார்டுகளில் ஓட்டு கேட்கிறார். இரவு 10 மணிக்கு 53-வது வார்டில் உள்ள அன்னை சத்யாநகர் காசிவிஸ்வநாதர் கோவில் அருகே பிரசாரத்தை முடிக்கிறார்.
கொளத்தூர் தொகுதியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் இன்று பிரசாரம் செய்தார். அவர் கொளத்தூர் தொகுதி அ.தி.மு.க. சைதை துரைசாமிக்கு ஆதரவாக வீதி வீதியாக சென்று ஓட்டுக் கேட்டார். இன்று காலை 10 மணி அளவில் கொளத்தூர் தொகுதி ரெட்டேரி சந்திப்பில் பிரசாரத்தை தொடங்கினார். அங்கிருந்து பேப்பர்மில் ரோடு, அண்ணாசாலை, எஸ்.ஆர்.பி. கோவில், 70 அடி ரோடு சந்திப்பு, பெரவள்ளூர் சந்திப்பு, திரு.வி.க.நகர் பஸ்நிலையம், சிம்சன் மைதானம், மூலக்கடை பகுதிகளில் திறந்த வேனில் சென்று ஓட்டுக் கேட்டார்.
மு.க.ஸ்டாலின்- விஜயகாந்த் ஒரே தொகுதியில் போட்டி பிரசாரம் செய்வதால் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி கட்சியினர் உற்சாகமாக உள்ளனர்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications