கிரிக்கெட் உலக் கோப்பை யாருக்கு: கணவருடன் சானியா மோதல்!

Subscribe to Oneindia Tamil

Sania Mirza and Sohaib Malik
துபாய்: இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கும், அவரது கணவர் சோயிப் மாலிக்கிற்கும் கிரிக்கட் உலகக் கோப்பையை வெல்லப்போவது யார் என்பது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளதாம்.

ஹைதராபாத்தில் பிறந்தவரான பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக்கை பெரும் பிரச்சனைகளுக்கு பிறகு மணந்தார். தற்போது அவர் கணவருடன் துபாயில் வசித்து வருகிறார்.

கடந்த சில நாட்களாக அவர்கள் இருவருக்கிடையில் தீராத மோதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் இது செல்லச் சண்டைதானாம். காரணம் கிரிக்கெட் உலகக்கோப்பை தான்.

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா தான் ஜெயிக்கும் என்று ஒரு ப்க்கம் சானியா கூற, இல்லை இல்லை பாகிஸ்தான் தான் ஜெயிக்கும் என்று இன்னொரு பக்கம் சோயிப் மாலிக் அடம்பிடிக்க மோதல் நீடிக்கிறதாம்.

இந்த தகவலை டிவிட்டரில் சானியா குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து சானியா கூறுகையில், எனது ஆதரவு எப்போதுமே இந்தியாவுக்குத்தான். எனது கணவர் பாகிஸ்தான்தான் வெல்லும் என்கிறார். ஆனால் நான் இந்தியாதான் வெல்லும் என்று கூறியுள்ளேன் என்று கூறியுள்ளார் சானியா.

சபாஷ் சரியான சண்டைதான்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+