எஸ்.எஸ்.எல்.சி தேர்வு நாளை தொடக்கம்-9.5 லட்சம் பேர் எழுதுகின்றனர்
சென்னை: தமிழகத்தில் நாளை எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் பத்தாம் வகுப்புத் தேர்வு துவங்குகிறது. தனித்தேர்வர்கள் உள்பட ஒன்பதரை லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க 4 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு மார்ச் 28-ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 11-ம் தேதி வரை நடக்கும் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் 10-ம் வகுப்பு மெட்ரிக்குலேஷன் மற்றும் ஆங்கிலோ-இந்தியன் தேர்வுகள் கடந்த 22-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தற்போது எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகின்றன.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 6,520 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 56 ஆயிரத்து 956 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இவர்களில் மாணவர்கள் 4 லட்சத்து 22 ஆயிரத்து 21 பேர். மாணவிகள் 4 லட்சத்து 35 ஆயிரத்து 935 பேர். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 2,800 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஓ.எஸ்.எல்.சி. தேர்வை 1,561 பேர் எழுதுகிறார்கள்.
சென்னையில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வை 272 பள்ளிகளைச் சேர்ந்த 36,148 மாணவ-மாணவிகள் 223 மையங்களில் எழுத உள்ளனர். இவர்களில் மாணவர்கள் 17,124 பேர். மாணவிகள் 19,024 பேர். தனித்தேர்வர்கள் ஒரு லட்சம் பேரையும் சேர்த்தால் மொத்தம் 91/2 லட்சம் பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வில் மாணவ-மாணவிகள் காப்பி அடிப்பதை தடுப்பதற்காக 4 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்குனரும், பள்ளிக்கல்வி பொறுப்பு இயக்குனருமான தண்.வசுந்தராதேவி தெரிவித்தார்.
தேர்வு அட்டவணை வருமாறு:
எஸ்.எஸ்.எல்.சி.
28-ம் தேதி- தமிழ் முதல் தாள்
29-ம் தேதி- தமிழ் 2-ம் தாள்
31-ம் தேதி- ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல் 1-ம் தேதி- ஆங்கிலம் 2-ம் தாள்
5-ம் தேதி- கணிதம்
8-ம் தேதி- அறிவியல்
11-ம் தேதி- சமூக அறிவியல்
ஓ.எஸ்.எல்.சி. தேர்வு
28-ம் தேதி- தமிழ்
29-ம் தேதி- மொழித்தாள்-1 (சமஸ்கிருதம், அரபி)
31-ம் தேதி- ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல் 1-ம் தேதி- ஆங்கிலம் 2-ம் தாள்
2-ம் தேதி- மொழித்தாள்-2 (சமஸ்கிருதம், அரபி)
5-ம் தேதி- கணிதம்
8-ம் தேதி- அறிவியல்
9-ம் தேதி- சிறப்பு மொழித்தாள்-3 (சமஸ்கிருதம், அரபி)
11-ம் தேதி- சமூக அறிவியல்
எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள் தினமும் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12.45 மணி வரை நடைபெறும். தேர்வு எழுதும் மாணவர்களின் பதட்டத்தைப் போக்கும் வகையில் வினாத்தாளை வாசிப்பதற்காக 15 நிமிடம் கால அவகாசம் கொடுக்கப்படும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications