For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வைகோ எங்களை ஆதரித்திருந்தால் பெருமையாக இருந்திருக்கும்-கார்த்திக் ஆதங்கம்

Google Oneindia Tamil News

Karthik
சென்னை: சட்டசபைத் தேர்தலில் எங்களது நாடாளும் மக்கள் கட்சிக்கு வைகோ ஆதரவு தெரிவித்திருந்தால், தெரிவித்தால் பெருமையாக இருந்திருக்கும் என்று ஆதங்கம் தெரிவித்துள்ளார் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சித் தலைவரான நடிகர் கார்த்திக்.

தற்போதைக்கு அவ்வப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறார் கார்த்திக். 30 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்களை அறிவித்தார். ஆனால் அடுத்த நாளே அவர்களில் 3 பேர் அதிமுகவில் போய் சேர்ந்து கொண்டனர். இதனால் விரக்தியாகியுள்ளார் கார்த்திக்.

இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாங்கள் அறிவித்த 30 வேட்பாளர்களில் 3 பேர் அ.தி.மு.க.வில் சேர்ந்து விட்டனர். 2006-ம் ஆண்டு நடந்த தேர்தலின் போதும் இது போல் தான் அவர்கள் செய்தார்கள். இப்போதும் அப்படி தான் செய்கிறார்கள்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீது நான் மதிப்பும், மரியாதையும் வைத்து இருக்கிறேன். ஆனால் அவர்களுடன் இருக்கும் சகாக்களுக்கு இது போன்று தான் சிந்திக்க தோன்றும்.

என்னை மாதிரியே எங்கண்ணன் வைகோ...!

எனக்கு வைகோவை ரொம்ப பிடிக்கும். அவரை என் மூத்த சகோதரனாக நினைக்கிறேன். அதனால் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து இந்த தம்பி வெளியே வந்தது போல் அவரும் வந்திருக்கிறார். வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும்.

தேர்தல் அறிக்கைகள் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நாங்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையை சிலர் காப்பி அடிக்கிறார்கள். எப்படியோ மக்களுக்கு நல்லது நடந்தால் சரிதான். நாங்கள் 27 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். தேர்தல் ஆணையத்திடம் டார்ச் லைட் சின்னம் கேட்டு இருக்கிறோம்.

சிவகாசி தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்று மக்கள் விரும்பினார்கள். நான் அங்கு போட்டியிட்டால் குறைந்தபட்சம் 70 ஆயிரம் ஓட்டுக்களையாவது பெறுவேன். ஆனால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்றபோது அந்த கட்சியை ஆதரித்து சிவகாசியில் பேசி விட்டேன். இப்போது நான் அவர்களுடன் இல்லை. இப்போது அவர்களை எதிர்த்து அங்கே எப்படி பேச முடியும்.

சிவகாசி மட்டுமல்லாமல் நாங்கள் போட்டியிடாத இடங்களில் இருந்து சுயேச்சை வேட்பாளர்கள் எங்கள் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள். அவர்களில் எங்கள் கட்சிக்கு ஏற்றவர்களை தேர்வு செய்து, அவர்களை ஆதரிக்க முடிவு செய்து இருக்கிறோம்.

சிடி போட்டு அனுப்பப் போறேன்!

29-ந் தேதி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறேன். குறைந்த நாட்களில் எல்லா தொகுதிக்கும் என்னால் செல்ல முடியாது. அதனால் பிரச்சார சி.டி.யை தயார் செய்து வைத்து இருக்கிறேன். அந்த சி.டி.க்களை நிர்வாகிகளிடம் கொடுத்து அனுப்புவேன்,

இலவசமாக கொடுக்க முடியாத பொருட்களையெல்லாம், கொடுக்கப்போவதாக ஜெயலலிதா கூறியுள்ளார். அதிமுகவின் தேர்தல் அறிக்கை சுயசிந்தனை இல்லாமல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் பொய்யான தேர்தல் அறிக்கையை யாரும் நம்பி ஏமாறாமல், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். திமுகவின் தேர்தல் அறிக்கையை அப்படியே ஜெராக்ஸ் எடுத்துள்ளனர்.

தன்மானம் உள்ளவர்கள் யாரும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க மாட்டார்கள். அதிமுக வெற்றி பெற்றால் சட்டசபையின் நிலைமை மிகவும் மோசமாகிவிடும் என்றார் கார்த்திக்.

English summary
Actor Karthik has said that, If Vaiko had supported us we would have honoured. We still expect Vaiko's support, he said.He also said, People will not trust Jayalalitha and her manifesto, which is a xerox copy of DMK poll manifesto, he added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X