மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டால்...:!: பாக். வீரர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் யாரும் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடக் கூடாது என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர்களின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
வரும் 30-ம் தேதி மொகாலியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் அரையிறுதிப் போட்டி நடக்கின்றது. இதையொட்டி தான் ரெஹ்மான் மாலிக் பாகிஸ்தான் வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
யாரும் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடக் கூடாது என்று எச்சரித்துள்ளேன். அவர்களை உன்னிப்பாக கண்காணித்து வருகிறேன். அதையும் மீறி ஏதாவது நடந்தால், நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம்.
பாக். வீரர்கள் குற்றமற்றவர்கள் என்று எனக்கு தெரியும். இருந்தாலும் அவர்கள் யார் யாரை சந்திக்கிறார்கள், யாரிடம் எல்லாம் செல்போனில் பேசுகிறார்கள் என்று உளவுத் துறை தகவல் சேகரித்து வருகிறது.
லண்டன் சம்பவத்திற்குப் பிறகு இந்த நடவடிக்கைகள் அவசியமானவை என்றார்.
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் நடக்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். லண்டனில் மேட்ச் பிக்சிங் விவகாரத்தில் 3 பாக். வீரர்கள் சிக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications