தேர்தல்: பாட்சாவுக்கு பிரதே பரிசோதனை செய்த டாக்டர் மனு நிராகரிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சாவுக்கு பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் டேகலின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

வரும் சட்டசபை தேர்தலில் மதுரவயல் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட டேகல் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். தேர்தலில் நிற்கத் தான் தனது பதவியை ராஜினாமா செய்ததாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் ராஜினாமாவை அரசு நிராகரித்து விட்டது.

இந்த நிலையில் அவரது வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டு விட்டது.

டேகல் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகத் தெரிவித்திருந்தபோதிலும், அதற்கான ஆதாரங்களை சமர்பிக்கவில்லை என்று கூறப்படுகின்றது. மேலும் தான் உளுந்தூர்பேட்டை பகுதி வாக்காளர் என்பதற்கான சான்றையும் சமர்பிக்கவில்லை, வேட்பு மனுவில் கையெழுத்தும் போடவில்லை. இதனால்தான் அவரது வேட்பு மனு தள்ளுபடியாகி விட்டது.

தனது பதவி ராஜினாமாவை அரசு ஏற்க மறுத்து விட்டதைத் தொடர்ந்து கடந்த வாரம் தனது ராஜினாமாவை மறுபரிசீலனை செய்யுமாறு அரசுக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிமன்றமும் அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளுமாறு சுகாதாரத் துறை இயக்குனருக்கு உத்தரவிட்டது.

சாதிக் பாட்சா மூச்சுத் திணறி தான் இறந்தார் என்று பிரேத பரிசோதனை முடிந்த பிறகு டேகல் தெரிவித்தார். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே எதுவும் கூற முடியும் என்றவர் திடீர் என்று ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+