மனைவியையே ஏமாற்றும் காங். தலைவர்கள்: இளங்கோவன்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: அந்த காலத்தில் இருந்த காங்கிரஸ் தலைவர்கள் தூய மனமும், சிந்தனையும் உடையவர்களாக இருந்தனர். ஆனால் இக்காலத் தலைவர்களோ கட்டிய மனைவியையே ஏமாற்றுகின்றனர் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் கோவை செழியன் வாழ்க்கை வரலாறு குறித்த 'வணங்காமுடி வாழ்க்கை' எனற நூல் வெளியீட்டு விழா நடந்தது. அதில் கலந்து கொண்டு நூலை வெளியிட்டு இளங்கோவன் பேசியதாவது,

எனக்கு தெரிந்த 50 உயர்ந்த தலைவர்களில் முதலிடத்தில் இருப்பவர் கோவை செழியன். என் பள்ளிப் பருவத்தில் அவரை தினமும் பார்ப்பேன். சிலரை பார்த்தவுடனேயே பாசம் வரும். சிலரை பார்க்காமலேயே கோபம் வரும். கோவை செழியனைப் பார்த்தவுடனே பாசம் வரும். தன் கருத்தை எந்த இடத்திலும் தயங்காமல் தெரிவிப்பவர் அவர். அவரிடம் இருந்து தான் நான் மனதில் உள்ளதை வெளிப்படுத்தக் கற்றுக்கொண்டேன்.

தனது காலத்தில் சினிமா உலகத்தையும், அரசியலையும் கைக்குள் வைத்திருந்தவர் எம்.ஜி.ஆர். மக்கள் சக்தி அவர் கையில் இருந்தது. ஆனால் இன்றைய தலைவர்களோ ஒருவரை பிடிக்கவில்லை என்றால் இன்னொருவருக்கு வாக்களியுங்கள் என்கின்றனர்.

'திராவிட நாடு வேண்டும்' என்று தமிழர் தேசிய கட்சி கேட்டதற்கு பிரிவினை பற்றி பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றது அரசு. அப்போது கூட தேசியம் குறி்தது பேசியவர் கோவை செழியன். கடந்த 1962-ம் ஆண்டு நடந்த தேர்தலில் என் தந்தை போட்டியிட்டபோது, பல கார்கள் அனுப்பினார் கோவை செழியன். அவர் முதல்வராக நாடு கொடுத்து வைக்கவில்லை. இன்று நாளிதழ்களில் படித்திருப்பீர்கள். இன்றைய தலைவர்கள் மக்களை மற்றும் தான் ஏமாற்றுகிறார்கள் என்று நினைத்தால், ஒரு தலைவர் கட்டிய மனைவியையே ஏமாற்றியுள்ளார். தூய்மையான சிந்தனையுள்ளவர்கள் கட்சிக்கு வர வேண்டும். போராடியும் பலனில்லை என்று கருதுகிறீர்கள். விரைவில் கரு மேகங்கள் கூடி மழை வரும்போது நல்லது நடக்கும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+