விஜயகாந்த் குறித்து முழுசாச் சொன்னா நாறிப் போயிடும்-நெப்போலியன்
திருக்கோவிலூர்: விஜயகாந்த் குறித்த அத்தனை விஷயமும் எனக்குத் தெரியும். அதையெல்லாம் வெளியில் சொல்லத் தொடங்கினால் நாறிப் போயிடும் என்று கூறியுள்ளார் மத்திய இணை அமைச்சர் நடிகர் நெப்போலியன்.
திருக்கோவிலூரில் நடந்த திமுக தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,
சினிமாவில் மார்க்கெட் போனதால், வேறு வழியில்லாமல் கட்சி துவங்கிய விஜயகாந்த் உடன் கூட்டணி அமைத்துள்ளார் ஜெயலலிதா.
கம்பெனி ஆரம்பிக்கிற மாதிரி அவர் மனைவி, மைத்துனரை வைத்து கட்சி துவங்கி விட்டார். குடும்ப அரசியலைப் பற்றி பேசும் விஜயகாந்த், குடும்பத்துடனே அரசியலை ஆரம்பித்து இருக்கிறார்.
இவரால் கல்லூரிக்கு கூட முதல்வராக முடியாது. அதற்கும் படிப்பு தகுதி வேண்டும். அப்படிப்பட்ட விஜயகாந்த் எல்லோரையும் கிண்டல் செய்கிறார்.
விஜயகாந்த் எங்காவது ஜெயலலிதாவை முதல்வராக்குவேன் என்று சொன்னாரா... இல்லை. ஏன் என்றால் அவர் முதல்வராக வேண்டும் என்ற ஆசையில் உள்ளார். இந்த அம்மாவோ அவரை எப்ப எட்டி உதைக்கலாம் என்று பார்த்துக் கொண்டு இருக்கிறார்.
விஜயகாந்த் 2005ல் கட்சி ஆரம்பிக்கும் வரை மக்களை பற்றி சிந்திக்கவில்லை. படத்துல நடிச்சு முகம் வீங்கி போனதால படவாய்ப்பு குறைஞ்சது. அதுக்கு அப்புறம் கம்பெனி ஆரம்பிக்கிற மாதிரி புதுசா கட்சி ஆரம்பிச்சார்.
இவர் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது நான் துணைத்தலைவராக இருந்தேன். இவரது வண்டவாளம் முழுவதும் எனக்கு தெரியும். அதை வெளியில் சொன்னால் நாறிவிடும்.
பள்ளிக்கூடத்தில் வாத்தியார் மாணவனை அடிப்பதுபோல் விஜயகாந்த் தனது வேட்பாளரை அடிக்கிறார் என்றார் நெப்போலியன்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications