அதிமுக கொடிகளை அகற்ற சொன்ன விஜயகாந்த்துக்கு கடும் எதிர்ப்பு

அரியலூர் பேருந்து நிலையம் அருகே விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அதிமுக தொண்டர்கள் தங்களது கட்சி கொடிகளை உயர்த்திப் பிடித்தி்ருந்தனர். இதைப் பார்த்த விஜயகாந்த், அந்த (அதிமுக) கொடிகளை இங்கிருந்து அகற்றுங்க என்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுக தொண்டர்கள் விஜய்காந்துக்கு எதிராக கூச்சலிட்டனர். உடனே தனது கட்சியினரிடம் அவுங்களைப் பிடிங்க என்று சத்தம் போட்டார் விஜய்காந்த்.
தொடர்ந்து, எம்புட்டு நேரம் சொல்ரேன்,மடையனா? அந்த கொடியை கீழே போடு... என விஜய்காந்த கத்த, இதையடுத்து அதிமுகவினரின் எதிர்ப்பு கோஷம் மேலும் அதிகமானது. இதையடுத்து பிரச்சாரமே செய்யாமல் திரும்பிச் சென்றார் விஜயகாந்த்.
விஜய்காந்துடன் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவோ அல்லது ஜெயலலிதாவுடன் விஜய்காந்தோ இதுவரை ஒரு இடத்தில் கூட கூட்டாக பிரச்சாரமோ, பொதுக் கூட்டமோ நடத்தவில்லை என்பதும், அப்படிப்பட்ட திட்டமே அதிமுக கூட்டணியிடம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
4 தேமுதிக நிர்வாகிகள் 4 நீக்கம்:
இந் நிலையில் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கட்சிக்கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாலும் கீழ்க்காணும் நிர்வாகிகள் 4 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.
அவர்கள் பெயர் விவரம் வருமாறு:
1) சி.ஆர்.பாண்டியன், நாகை வடக்கு மாவட்டம், கொள்ளிடம் ஒன்றிய கழக துணை செயலாளர்.
2) பி.நடராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்டம், விளாத்திகுளம் ஒன்றிய கேப்டன் மன்ற செயலாளர்.
3) ஜோஸ் பில்வின், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட மீனவரணி செயலாளர்.
4) எஸ்.குமாரவேலு, புதுச்சேரி தெற்கு மாவட்ட செயலாளர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications