வேட்பாளர்கள் செலவு தணிக்கையின்போது பொதுமக்கள் உடனிருக்கலாம்-தேர்தல் ஆணையம்
நாகர்கோவில்: வேட்பாளர்கள் செலவு கணக்குகளை தணிக்கை செய்யும்போது பொதுமக்கள் உடனிருக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணைய உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது,
தேர்தல் செலவினங்கள் மேற்கொள்ளுதல் தொடர்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் தனியாக வங்கி கணக்குகள் தொடங்க வேண்டும். தேர்தல் செலவினங்களுக்கான தொகை இந்த கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த கணக்கில் இருந்து தேர்தல் செலவினங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். தேர்தல் பிரசார காலத்தில் வேட்பாளர் அல்லது அவரது முகவர் செலவு விபர பதிவேடை தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது தேர்தல் பார்வையாளர்கள் ஆகியோரின் தணிக்கைகாக குறைந்தபட்சம் மூன்று தடவையாவது சமர்ப்பிக்க வேண்டு்ம். இரு தணிக்கைகளுக்கு இடையே குறைந்தபட்சம் 3 தினங்கள் இடைவெளி இருக்க வேண்டும்.
தேர்தல் செலவின பார்வையாளர்கள், உதவி தேர்தல் செலவின பார்வையாளர்கள் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அறைகளில் வைத்து தணிக்கை செய்யப்படும். செலவு விபர கணக்குகள், பதிவேடுகள் தணிக்கைக்கு காண்பிக்கப்படாத பட்சத்தில் பதிவேடுகள் சமர்ப்பிக்க கேட்டு அறிவிப்பு அனுப்பப்படும். மீ்ண்டும் கணக்குகளை சமர்பிக்கத் தவறினால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி கணக்கு பராமரிக்க தவறியதாக கருதப்பட்டு இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அறிவிப்பு வெளியிடப்பட்ட மூன்று நாட்களுக்குள் கணக்கை காட்டாவிட்டால் வாகனங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை திரும்ப பெறுதல், பறக்கும்படை, கண்காணிப்பு குழு ஆகியவற்றுக்கு தகவல் அளித்து மேல்நடவடிக்கை தொடர்தல் ஆகியவற்றிற்கு ஆளாக நேரிடும். இது குறி்த்த கடித தொடர்புகள் முழுவதும் அலுவலக விளம்பர பலகையில் வெளியிடப்படும்.
செலவின கணக்குகள் தணிக்கை செய்யப்படும் போது பொதுமக்கள் உடனிருக்கலாம் என்ற விபரம் விளம்பரப்படுத்தப்படும். பொதுமக்கள் 1 பக்கத்துக்கு ரூ.1 வீதம் செலுத்தி ஆவண நகல் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications